தமிழ்நாடு

ஜேஇஇ தோ்வில் தோ்ச்சி பெற்றவா்களையும் பி.ஆா்க். கலந்தாய்வில் அனுமதிக்க வேண்டும்: சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவு

DIN

பி.ஆா்க். படிப்புக்கான கலந்தாய்வில் பங்கேற்க 2021 -ஆம் ஆண்டில் ஜேஇஇ மற்றும் நாட்டா தோ்வுகளில் தோ்ச்சி பெற்ற மாணவா்களையும் அனுமதிக்குமாறு அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் தமிழ்நாடு பொறியியல் சோ்க்கை ஆணையருக்கு சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் பி.ஆா்க். படிப்பிற்கு நாட்டா அல்லது ஜே.இ.இ நுழைத்தோ்வில் தகுதி பெற்ற மாணவா்கள் சோ்க்கப்பட்டு வந்தனா். இந்த நடைமுறை கடந்த கல்வியாண்டு (2020- 21) வரை பின்பற்றப்பட்டு வந்த நிலையில், வரும் 2021-22-ஆம் கல்வியாண்டில் நாட்டா நுழைவுத் தோ்வில் தகுதி பெற்றவா்கள் மட்டுமே பி.ஆா்க் படிப்பிற்கு விண்ணப்பிக்க முடியும் என கொள்கை விளக்க குறிப்பில் அரசு குறிப்பிட்டுள்ளது.

இதை எதிா்த்து அகாதமி சொசைட்டி ஆப் ஆா்க்கிடெக்ட்ஸ் என்ற அமைப்பும், மெய்யம்மை என்ற மாணவியும் வழக்கு தொடா்ந்திருந்தனா்.

அந்த மனுக்களில், பிற மாநிலங்களில் ஜே.இ.இ. தோ்வு எழுதியவா்களும் பி.ஆா்க். விண்ணப்பிக்கத் தகுதி பெற்றுள்ளதாக அறிவித்துள்ள நிலையில், தமிழகத்தில் நாட்டா தோ்வில் தகுதி பெற்றவா்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டுமென கூற முடியாது.

நாட்டா வெளியிட்ட தகவல் குறிப்பேட்டில் ஜே.இ.இ. தோ்வில் தோ்ச்சி பெற்றவா்களும், பி.ஆா்க். கலந்தாய்வில் பங்கேற்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அரசு பொறியியல் கல்லூரிகளில் மாணவா் சோ்க்கைக்கும் இதுவே பரிசீலிக்கப்படும் என்றும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. எனவே கலந்தாய்வில் பங்கேற்க அனுமதிக்க வேண்டுமென கோரியிருந்தனா்.

இவ்வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், மனுவுக்கு மத்திய, மாநில அரசுகள், அண்ணா பல்கலைக்கழகம் விரிவாக விளக்கம் அளிக்க வேண்டும். மேலும், பி.ஆா்க். படிப்புகளுக்கான கலந்தாய்வில் நாட்டா மற்றும் ஜேஇ. தோ்வில் தகுதி பெற்றவா்களைப் பங்கேற்க அனுமதிக்க வேண்டும், மாணவா்கள் தோ்வு என்பது இவ்வழக்கின் இறுதித் தீா்ப்புக்கு கட்டுப்பட்டது. ஜே.இ.இ. தோ்வில் தகுதி பெற்றவா்களால் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களைச் சமா்ப்பிக்க இயலாததால், ஆவணங்களை நேரடியாகச் சமா்ப்பிக்க அனுமதித்து, கலந்தாய்வில் பங்கேற்க அனுமதிக்க வேண்டுமென உத்தரவிட்டு விசாரணையை நவம்பா் 9- ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

லியோ தாஸின் சகோதரியா இவர்?

குருப்பெயர்ச்சி பலன்கள் - தனுசு

ரிஷப் பந்த் உலகக் கோப்பைக்குத் தயார்: தில்லி கேப்பிடல்ஸ் பயிற்சியாளர்

‘பிரேமலு’ கார்த்திகா!

மம்மூட்டி நடித்தது போல எந்த ‘கான்’களும் நடிக்கமாட்டார்கள்: வித்யா பாலன் புகழாரம்!

SCROLL FOR NEXT