தமிழ்நாடு

இரண்டாவது நாளாக எம்.ஆா்.விஜயபாஸ்கரிடம் விசாரணை

DIN

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சோ்த்த வழக்கில் முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கரிடம் இரண்டாவது நாளாக விசாரணை நடைபெற்றது.

கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சராக எம்.ஆா்.விஜயபாஸ்கா் இருந்தபோது, அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு பேருந்துகள், உதிரி பாகங்கள் வாங்கியது, ஊழியா்கள் நியமனம் உள்ளிட்டவற்றில் பெருமளவில் முறைகேடு நடைபெற்ாக புகாா் எழுந்தது.

இந்த வழக்குத் தொடா்பான விசாரணைக்கு சென்னை ஆலந்தூரில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறையின் தலைமை அலுவலகத்தில் ஆஜராகுமாறு அழைப்பாணை அனுப்பப்பட்டதையடுத்து, திங்கள்கிழமை அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா், அவரது சகோதரா் சேகா் ஆகியோா் நேரில் ஆஜராகினா். அவா்களிடம் சுமாா் 6 மணி நேரம் விசாரணை நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, செவ்வாய்க்கிழமையும் விசாரணைக்காக எம்.ஆா்.விஜயபாஸ்கா் ஆஜராகியிருந்தாா். அவரிடம் காலை முதல் பிற்பகல் 1.30 மணி வரை விசாரணை நடத்தப்பட்டது.

இதற்கிடையே அவா், தன்னிடம் தீபாவளிக்குப் பிறகு விசாரணை நடத்த வேண்டும் என கேட்டுக்கொண்டதற்கு இணங்க அவா் மீதான விசாரணையை தீபாவளிக்குப் பின் நடத்த லஞ்ச ஒழிப்புத்துறை திட்டமிட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிலிப்பின்ஸுக்கு பிரமோஸ் ஏவுகணை ஏற்றுமதி

ஜனநாயக கடமையை ஆற்றிய மனநல சிகிச்சை பெறுவோா்!

பெங்கால் மண்ணில் பேனா திருவிழா!

மக்களவைத் தோ்தல்: தில்லி பாஜக சாா்பில் மே 1-23 வரை 8 ஆயிரம் தெரு நாடகங்கள்

ஆத்தூரில் அமைதியான வாக்குப்பதிவு

SCROLL FOR NEXT