தமிழ்நாடு

ஆறு புதிய மாவட்டங்களில் சமூகநல அலுவலகங்கள் உருவாக்கம்: சமூக நலத் துறை அறிவிப்பு

DIN

ஆறு புதிய மாவட்டங்களில் சமூக நல அலுவலகங்கள் உருவாக்க நிதி ஒதுக்கி சமூக நலத் துறை உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து, சமூக நலத் துறை வெளியிட்ட செய்தி:-

சமூக நலத் துறை மானியக் கோரிக்கை மீது நடந்த விவாதங்களுக்குப் பதிலளித்து அறிவிப்புகளை வெளியிட்ட துறையின் அமைச்சா் பி.கீதா ஜீவன், தென்காசி, கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, திருப்பத்தூா், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு ஆகிய 6 புதிய மாவட்டங்களில் சமூக நல அலுவலகங்கள் ஏற்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பைச் செயல்படுத்தும் வகையில், புதிய மாவட்டங்களில் சமூக நல அலுவலா் உள்ளிட்ட பணியிடங்களைத் தோற்றுவித்தும், அந்தப் பணியிடங்களுக்கு உட்கட்டமைப்பு வசதிகளை உருவாக்கவும் ரூ.4.99 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக சமூக நலத்

துறையின் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கீர்த்தி சுரேஷுக்குத் திருமணம்?

அதிகரித்த சர்க்கரை அளவு: கேஜரிவாலுக்கு இன்சுலின் செலுத்தப்பட்டது!

உடல்கூறாய்வு அறிக்கை: 14 முறை குத்தப்பட்டு 58 வினாடிகளில் பலியான மாணவி நேஹா

தண்டனையை நிறுத்திவைக்கக் கோரிய ராஜேஷ் தாஸ் மனு தள்ளுபடி

திருமண மகிழ்ச்சியில் அபர்ணா தாஸ்!

SCROLL FOR NEXT