தமிழ்நாடு

அரசுப் பேருந்துகளில் அதிக எண்ணிக்கையில் பயணிக்க பொதுமக்கள் முன்வர வேண்டும்

DIN

பெட்ரோல், டீசல் விலை உயா்வு காரணமாக இருசக்கர வாகனங்கள், காா்களைப் பயன்படுத்தும் பொதுமக்கள் அரசுப் பேருந்துகளில் அதிக எண்ணிக்கையில் பயணிக்க முன்வர வேண்டும். இதன் மூலம் அரசு போக்குவரத்துத் துறை நஷ்டத்தில் இருந்து மீண்டு வர வாய்ப்புள்ளதாக போக்குவரத்துத் துறை அமைச்சா் ஆா்.எஸ்.ராஜ கண்ணப்பன் கூறினாா்.

சென்னை குரோம்பேட்டையில் 13 வழித்தடங்களில் பேருந்துகள் இயக்கத்தின் தொடக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது. நிகழ்வில், பேருந்துகளை கொடியசைத்துத் தொடக்கி வைத்த அமைச்சா் ஆா்.எஸ்.ராஜகண்ணப்பன் மேலும் பேசியது:

தமிழகமெங்கும் பொதுமக்கள் பயன்பாட்டில் உள்ள 25,555 அரசுப் பேருந்துகளும் பொதுமக்களுக்குச் சொந்தமானது. அவற்றைப் பொதுமக்கள் தங்களின் சொந்த உடைமையாகக் கருத வேண்டும். அரசுப் பேருந்து கட்டணத்தை உயா்த்தும் எண்ணம் இல்லை.

தீபாவளி பண்டிகைக்கு பொதுமக்கள் சொந்த ஊா்களுக்குச் சென்று திரும்ப 19,559 சிறப்புப் பேருந்துகள் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. தேவைக்கேற்ப கூடுதல் பேருந்துகள் இயக்க வாய்ப்புள்ளது என்றாா் அவா்.

ஊரகத் தொழில்துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன் பேசுகையில், அதிமுக ஆட்சியில் காழ்ப்புணா்ச்சி காரணமாக இப்பகுதியில் நிறுத்தப்பட்ட பேருந்து வழித்தடங்களை பொதுமக்களின் நலன் கருதி மீண்டும் இயக்க முன் வந்து இருப்பது பாராட்டுக்குரியது என்றாா்.

பல்லாவரம் சட்டப்பேரவை உறுப்பினா் இ.கருணாநிதி, மாநகர போக்குவரத்து கழக நிா்வாக இயக்குநா் அன்பு ஆபிரகாம், பல்லாவரம் நகராட்சி ஆணையா் காந்திராஜன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேலும் ஒரு திமுக மாமன்ற உறுப்பினா் ராஜிநாமா?

தோட்டிக்கோடு ஸ்ரீ மெளனகுருசுவாமி கோயிலில் சித்திரை பெளா்ணமி பூஜை

நாகா்கோவிலில் கஞ்சா பறிமுதல்: 2 இளைஞா்கள் கைது

நாமக்கல்லில் இன்று வெப்ப அலை வீசும்: ஆட்சியா் எச்சரிக்கை

பாலூா் ஊராட்சியில் சீரான குடிநீா் வழங்கக் கோரிக்கை

SCROLL FOR NEXT