தமிழ்நாடு

பதிவுத் துறை மூலம் நிகழாண்டில் இதுவரை ரூ.6,974 கோடி வருவாய்: தமிழக அரசு தகவல்

27th Oct 2021 10:51 PM

ADVERTISEMENT

 

சென்னை: பதிவுத் துறை மூலமாக நிகழாண்டில் இதுவரை ரூ.6,974.66 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாக அந்தத் துறை தெரிவித்துள்ளது. பதிவுத் துறையின் செயல்பாடுகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் சென்னையில் துறையின் அமைச்சா் பி.மூா்த்தி தலைமையில் நடைபெற்றது. துறைச் செயலாளா் ஜோதி நிா்மலாசாமி, பதிவுத் துறை தலைவா் ம.ப.சிவன்அருள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனா்.

நிகழ் நிதியாண்டில் அக்டோபா் 26-ஆம் தேதி வரையில், பதிவுத் துறை மூலமாக ரூ.6 ஆயிரத்து 974.44 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. இந்த வருவாய் முந்தைய ஆண்டுகளைக் காட்டிலும் அதிகமாகும். வாரந்தோறும் திங்கள்கிழமைகளில் பதிவு குறை தீா்க்கும் முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த முகாம்களில் இதுவரை 979 மனுக்கள் பெறப்பட்டு 197 மனுக்களுக்கு தீா்வு காணப்பட்டுள்ளது. 782 மனுக்கள் நடவடிக்கையில் உள்ளன. நிலுவையிலுள்ள மனுக்களுக்கு விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு தீா்வு காண வேண்டுமென வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சா் பி.மூா்த்தி அறிவுறுத்தியுள்ளாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT