தமிழ்நாடு

இல்லம் தேடிக் கல்வித் திட்டம்: முதல்வர் தொடக்கி வைப்பு

27th Oct 2021 08:49 PM

ADVERTISEMENT


இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் விழுப்புரத்தில் புதன்கிழமை தொடக்கி வைத்தார்.

ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களின் கற்றல் இடைவெளியை ஈடுசெய்யும் நோக்கத்தில் ரூ. 200 கோடி செலவில் ‘இல்லம் தேடிக் கல்வி’ திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்தத் திட்டத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் வட்டம், முதலியார்குப்பத்தில் புதன்கிழமை தொடக்கி வைத்து, திட்டக் கையேட்டினை வெளியிட்டார்.

ADVERTISEMENT

இத்திட்டம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த மாணவ, மாணவியரின் சைக்கிள் பேரணியை முதல்வர் கொடியசைத்து தொடக்கி வைத்தார்.

இதையும் படிக்கமுல்லைப் பெரியாறு அணை: கேரள வதந்திகளுக்கு தமிழக அரசு பதில்

இந்த நிகழ்வில், உயர்கல்வித் துறை அமைச்சர் க. பொன்முடி, சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத் துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ். மஸ்தான், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள், தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவர் திண்டுக்கல் லியோனி, பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலாளர் காகர்லா உஷா, பள்ளிக் கல்வித் துறை ஆணையர் க. நந்தகுமார், விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் த. மோகன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags : education
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT