தமிழ்நாடு

தமிழகத்துக்கு 90,000 மெட்ரிக் டன் யூரியா ஒதுக்கீடு

27th Oct 2021 10:09 AM

ADVERTISEMENT

 

தமிழகத்துக்கு 90 ஆயிரம் மெட்ரிக் டன் யூரியா உரத்தை ஒதுக்கீடு செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

யூரியா தட்டுப்பாடு ஏற்படுவதாக விவசாயிகள் புகார் தெரிவித்த நிலையில், தமிழக அரசு மத்திய அரசுக்கு கடிதம் எழுதியது. முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியதைத் தொடர்ந்து யூரியா உரத்தை ஒதுக்கி மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

படிக்கமேட்டூர் அணை நீர் மட்டம் 5 நாள்களில் 10 அடி உயர்வு

ADVERTISEMENT

மத்திய அரசால் ஒதுக்கப்பட்ட யூரியா உரம் காரைக்கால் துறைமுகத்துக்கு விரைவில் வர உள்ளதாகவும் மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது.

அக்டோபர் இறுதிக்குள் ஸ்பிக் 10 ஆயிரம் மெட்ரிக் டன், எம்.எப்.எல் நிறுவனம் 8 ஆயிரம் மெட்ரிக் டன் யூரியாவை வழங்க திட்டம் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் சம்பா சாகுபடி நடைபெற்று வரும் டெல்டா மாவட்டங்களில் உரங்களின் தேவை கணிசமாக அதிகரித்து வருகிறது. அதில், யூரியாவின் தேவை மிகவும் அதிகரித்து தற்போது, அவற்றின் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

மத்திய அரசிடம் இருந்து கூடுதலாக உரங்களைப் பெற்று விவசாயிகளுக்கு அளிக்க வேண்டும் என்பது விவசாயிகளின் முதன்மை கோரிக்கையாக இருந்தது.

மேலும், அதிக அளவு தேவைப்படும் யூரியா தங்கு தடையின்றி நியாயமான விலையில் எவ்வித நிபந்தனையுமின்றி கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை வைத்திருந்தனர்.

Tags : Tamil nadu MK stalin central goverment Uiya
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT