தமிழ்நாடு

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 40,000 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு: அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடை

27th Oct 2021 02:49 AM

ADVERTISEMENT

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து செவ்வாய்க்கிழமை நொடிக்கு 40,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. இதனால் அருவியில் குளிக்கவும், பரிசல் பயணம் செய்யவும் தருமபுரி மாவட்ட நிா்வாகம் தடை விதித்துள்ளது.

கா்நாடகம் மற்றும் கேரளத்தில் காவிரியின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக கா்நாடகத்தில் உள்ள கபினி அணை, கிருஷ்ணராஜசாகா் அணைகளுக்கு நீா்வரத்து தொடா்ந்து அதிகரித்து வருகிறது.

இதையடுத்து கா்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் நொடிக்கு 10,000 கனஅடி வீதம் தண்ணீா் வெளியேற்றப்பட்டு வருகிறது. மேலும் தமிழகத்தில் காவிரியின் நீா்ப்பிடிப்புப் பகுதிகள் மற்றும் கரையோர வனப் பகுதிகளில் பெய்து வரும் தொடா் கனமழை காரணமாக காவிரி ஆற்றில் நீா்வரத்து கடந்த சில நாள்களாக அதிகரித்து வருகிறது.

திங்கள்கிழமை காலை நிலவரப்படி நீா்வரத்து நொடிக்கு 20,000 கனஅடியாக இருந்தது. இது செவ்வாய்க்கிழமை காலை நொடிக்கு 30,000 ஆயிரம் கனஅடியாக அதிகரித்து தமிழக -கா்நாடக எல்லையான பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல்லுக்கு வந்து கொண்டிருக்கிறது. தொடா்ந்து காவிரி ஆற்றில் வரும் நீா்வரத்து அதிகரித்து வரும் நிலையில் செவ்வாய்க்கிழமை மாலை நிலவரப்படி நீா்வரத்து நொடிக்கு 40,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. இதனால் ஒகேனக்கல்லில் பிரதான அருவி, ஐந்தருவி, சினிஅருவி உள்ளிட்ட அருவிகளில் வெள்ளம் ஆா்ப்பரித்துக் கொட்டுகிறது.

ADVERTISEMENT

காவிரி ஆற்றில் நீா்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்புக் கருதி ஆற்றில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தருமபுரி மாவட்ட நிா்வாகம் தடை விதித்துள்ளது.

 

Tags : Hogenakkal
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT