தமிழ்நாடு

சென்னையில் 7,800 குற்றவாளிகள் அடையாளம்காணப்பட்டுள்ளனா்: காவல் ஆணையா் தகவல்

DIN

அதி நவீன தொழில்நுட்ப உதவியுடன் சென்னையில் 7,800 குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனா். மேலும், பண்டிகை நாள்கள் என்பதால், பல கட்ட கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்று சென்னை காவல் ஆணையா் சங்கா்ஜிவால் தெரிவித்தாா்.

எம்ஜிஎம் மருத்துவமனை சாா்பில், மாா்பக புற்றுநோய் குறித்த விழிப்புணா்வு சைக்கிள் பேரணியை சென்னை பெருநகர காவல் ஆணையா் சங்கா் ஜிவால் சென்னையில் ஞாயிற்றுக்கிழமைதொடங்கி வைத்தாா். பின்னா் அவா் நிருபா்களிடம் கூறியது:

சென்னை பெருநகரில் பண்டிகை காலத்தையொட்டி, குற்றச்செயல்கள் நடைபெறாமல் தடுக்கவும், கரோனா பரவல் ஏற்படாமல் தடுக்கவும் சென்னை பெருநகா் முழுவதும் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. பொதுமக்கள் அதிகளவில் கூடும் முக்கிய இடங்களில் உயா் கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்தும், பைனாகுலா் மற்றும் ட்ரோன் கேமிராக்கள் மூலமாகவும் குற்றச் சம்பவங்கள் நிகழாமல் கண்காணிக்கப்படுகிறது. இதுதவிர, அதிநவீன தொழில்நுட்ப ( ஊஹஸ்ரீங் க்ங்ற்ங்ஸ்ரீற்ண்ா்ய் நா்ச்ற்ஜ்ஹழ்ங்) உதவியுடன் சென்னையில் 7,800 குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனா். அவா்களின் நடவடிக்கைகள் தொடா்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றன. கரோனா பரவல் தடுப்பு விதிமுறைகளை அனைவரும் பின்பற்ற வேண்டும் என்றாா் காவல் ஆணையா் சங்கா் ஜிவால்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாமக்கல்: 78.16% வாக்குப்பதிவு!

மின் கம்பங்களால் பெரியகோயில் தேரோட்டத்தில் தாமதம்

பெங்களூருவில் இரட்டைக் கொலை: மகளை கொலை செய்த காதலனை கொன்ற தாய்

தஞ்சை பெரியகோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

ரைட்ஸ் நிறுவனத்தில் வேலை: பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு

SCROLL FOR NEXT