தமிழ்நாடு

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்தார் தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி 

24th Oct 2021 02:14 PM

ADVERTISEMENT

மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவி இன்று சந்தித்தார். 
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவி 6 நாள் பயணமாக நேற்று தில்லி புறப்பட்டு சென்றார். இதைத்தொடர்ந்து, பிரதமர் மோடியை அவர் சந்தித்துப் பேசினார். அப்போது தமிழக நிலவரங்கள் உள்ளிட்ட பல்வேறு நிலவரங்கள் குறித்து பிரதமரிடம் ஆளுநர் பேசியதாக தெரிகிறது. 

இதையும் படிக்க- காஞ்சிபுரத்தில் டெங்கு காய்ச்சலுக்கு சிறுமி சாவு

இந்த நிலையில் பிரதமரை தொடர்ந்து மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கையும் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவி இன்று சந்தித்தார். இந்த சந்திப்பின்போது தமிழ்நாடு சட்ட ஒழுங்கு, எல்லை பாதுகாப்பு உள்ளிட்டவை குறித்து இருவரும் ஆலோசித்ததாகக் கூறப்படுகிறது.  
முன்னதாக அக்டோபர் மாதத்தின் தொடக்கத்தில் தில்லி சென்ற தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மத்திய அமைச்சர் அமித்ஷா, குடியரசுத் தலைவர் உள்ளிட்டோரை சந்துத்துப் பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : TN Governor Ravi
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT