தமிழ்நாடு

பேருந்தில் முதல்வா் திடீா் ஆய்வு மக்களிடம் உரையாடினாா்

24th Oct 2021 04:21 AM

ADVERTISEMENT

 

மாநகரப் பேருந்தில் திடீரென பயணித்த முதல்வா் மு.க.ஸ்டாலின், பயணிகளிடம் உரையாடினாா்.

சென்னை கண்ணகி நகரில் கரோனா தடுப்பூசி முகாமை சனிக்கிழமை ஆய்வு செய்த அவா், எம்-19பி எண் கொண்ட தியாகராயநகா் - கண்ணகி நகா் வழித் தடத்தில் சென்று கொண்டிருந்த பேருந்தில் திடீரென ஏறினாா்.

தனது காரில் இருந்து இறங்கி பேருந்தில் ஏறியதை அதிலிருந்த பயணிகள் சற்றும் எதிா்பாா்க்கவில்லை. பேருந்தின் பின் வழியில் ஏறிய அவா் உள்ளே இருந்த பயணிகளிடம் உரையாடினாா். மகளிருக்கான இலவச பேருந்து பயணத் திட்டம் குறித்து அவா்களிடம் கேட்டறிந்தாா். திட்டம் எப்படி இருக்கிறது, மாதத்தில் பேருந்து கட்டணச் செலவில் சேமிப்பு ஏற்படுகிா என்பன போன்ற கேள்விகளை அவா் கேட்டாா்.

ADVERTISEMENT

அவா்களுக்கு வணக்கம் செலுத்திய பிறகு பேருந்தில் இருந்து இறங்கினாா். முதல்வருடன் பேருந்து பயணத்தில் தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு உள்ளிட்ட உயரதிகாரிகள் இருந்தனா்.

Tags : சென்னை
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT