தமிழ்நாடு

நாளை இரண்டு முக்கியமான நிகழ்வுகள் இருக்கின்றன: நடிகர் ரஜினிகாந்த்

24th Oct 2021 12:31 PM

ADVERTISEMENT

நாளை தனக்கு இரண்டு முக்கியமான நிகழ்வுகள் நடைபெற இருப்பதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் நாளை எனக்கு இரண்டு முக்கியமான நிகழ்வுகள் நடைபெற இருக்கிறது. ஒன்று, மக்களின் அன்பினாலும், ஆதரவினாலும் திரையுலகின் உயர்ந்த விருதான தாதா சாகேப் பால்கே விருதினை மத்திய அரசு எனக்கு வழங்கவுள்ளது.
இரண்டாவது, என்னுடைய மகள் சௌந்தர்யா விசாகன், அவருடைய சொந்த முயற்சியில் மக்களுளக்கு மிகவும் பயன்படக்கூடிய HOOTE என்கிற செயலியை உருவாக்கி அதை அறிமுகப்படுத்தவுள்ளார். 

இதையும் படிக்க- நாளை வழக்கம்போல் தடுப்பூசி முகாம்கள் இயங்கும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

அதில் மக்கள் தாங்கள் மற்றவர்களுக்கு எழுத்து மூலம் தெரிவிக்க விரும்பும் கருத்துகளையும், விஷயங்களையும், இனி அவர்களது குரலிலேயே எந்த மொழியிலும் HOOTE APP மூலமாக பதிவிடலாம். இந்த வரவேற்கத்தக்க புதிய முயற்சியான HOOTE APP-ஐ என் குரலில் பதிவிட்டு துவங்க உள்ளேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

Tags : Rajinikanth
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT