தமிழ்நாடு

8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

24th Oct 2021 03:18 PM

ADVERTISEMENT

வேலூர், கிருஷ்ணகிரி, ராணிப்பேட்டை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், வட கடலோர தமிழ்நாட்டில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரமாக வேலூர், கிருஷ்ணகிரி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, மதுரை, புதுக்கோட்டை, மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், உள் மாவட்டங்களில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணிநேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 
கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக சேலம் மாவட்டம் ஏற்காடு 10, திருப்பூர் மாவட்டம் திருமூர்த்தி அணை 9, நீலகிரி மாவட்டம் பந்தலூர் 8 செ.மீ., மழைப்பதிவாகி உள்ளது. 
வடகிழக்கு பருவமழை தென்னிந்திய பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்தில் துவங்குவதற்கான சாதகமான சூழல் நிலவுகிறது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 
 

Tags : weather update heavy rain
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT