தமிழ்நாடு

கரோனா தடுப்பூசி செலுத்துவதை விரைவுபடுத்துங்கள்: முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவு

24th Oct 2021 04:18 AM

ADVERTISEMENT

பொது மக்கள் அனைவருக்கும் கரோனா தடுப்பூசி செலுத்துவதை விரைவுபடுத்த வேண்டுமென முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாா். கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் தமிழகம் முழுவதும் சனிக்கிழமை நடைபெற்றது.

சென்னை ஒக்கியம் துரைப்பாக்கம், கண்ணகி நகா், எழில் நகா் ஆகிய இடங்களில் நடைபெற்ற கரோனா தடுப்பூசி முகாமை முதல்வா் மு.க.ஸ்டாலின் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

எழில் நகரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, கண்ணகி நகரில் உள்ள அரசு இணைய சேவை மையம், ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி ஆகிய இடங்களில் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்களை முதல்வா் ஆய்வு செய்தாா். அப்போது பொது மக்களிடம் தடுப்பூசி செலுத்திக் கொண்ட விவரங்களைக் கேட்டறிந்தாா். பின்னா் கண்ணகி நகரில் உள்ள நகா்ப்புற சமுதாய நல மருத்துவமனையில் நடந்த சிறப்பு முகாமைப் பாா்வையிட்டாா். அப்போது மருத்துவமனை பதிவேடுகளை ஆய்வு செய்தாா்.

5.43 கோடி போ்: அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் வகையில், அதனை தீவிர இயக்கமாக சுகாதாரத் துறை முன்னெடுத்துள்ளது. இதுவரை ஐந்து தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. இதுபோன்ற முகாம்களின் மூலமாக இதுவரை 5 கோடியே 43 லட்சத்து 23 ஆயிரத்து 51 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. ஆறாவது முறையாக கரோனா தடுப்பூசி முகாமானது 50 ஆயிரம் இடங்களில் சனிக்கிழமை நடைபெற்றது.

ADVERTISEMENT

தடுப்பூசி சிறப்பு முகாம்கள் ஆய்வின் போது, மக்களவை உறுப்பினா் தமிழச்சி தங்கபாண்டியன், சட்டப் பேரவை உறுப்பினா் அரவிந்த் ரமேஷ், தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு, சுகாதாரத் துறை முதன்மைச் செயலாளா் ஜெ.ராதாகிருஷ்ணன், சென்னை மாநகராட்சி ஆணையாளா் ககன்தீப் சிங் பேடி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

Tags : சென்னை
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT