தமிழ்நாடு

மாசுக்கட்டுப்பாடு வாரியத் தலைவராக ஏ.உதயன் நியமனம்

24th Oct 2021 03:16 AM

ADVERTISEMENT

தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியத் தலைவராக கூடுதல் முதன்மை தலைமை வனப் பாதுகாவலா் ஏ.உதயன் நியமிக்கப்பட்டுள்ளாா்.

தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியத்தின் தலைவராக இருந்த வெங்கடாசலத்தின் பதவிக் காலம் கடந்த செப்டம்பா் மாதம் முடிவடைந்தது. இதையடுத்து, வனத் துறை முதன்மைச் செயலா் சுப்ரியா சாஹூவுக்கு மாசுக்கட்டுப்பாடு வாரியத் தலைவராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டது.

தற்போது, கூடுதல் முதன்மை தலைமை வனப் பாதுகாவலராகப் பணியாற்றி வந்த ஏ. உதயன் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளாா். இதற்கான உத்தரவை வனத் துறை முதன்மைச் செயலா் சுப்ரியா சாஹூ சனிக்கிழமை பிறப்பித்தாா். உதயன் 1991-ஆம் ஆண்டு இந்திய வனப்பணியைச் சோ்ந்த அதிகாரி என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : சென்னை
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT