தமிழ்நாடு

தமிழகத்தில் மழலையர், நர்சரி பள்ளிகள் திறப்பு ஒத்திவைப்பு

23rd Oct 2021 10:20 AM

ADVERTISEMENT

தமிழகத்தில் கரோனா பாதிப்பு குறைந்துவரும் நிலையில், மெல்ல மெல்ல தளர்வுகள் அறிவிக்கப்பட்டுவருகின்றன. கல்லூரிகள், 9 முதல் 12 வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் ஆகியவை திறக்கப்பட்டுள்ள நிலையில், மழலையர் மற்றும் நர்சரி பள்ளிகள் நவம்பர் 1ஆம் தேதி முதல் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

கடந்த கடந்த 14-ம் தேதி கரோனா கட்டுப்பாடுகளில் தளர்வுகளை தமிழக அரசு அறிவித்திருந்தது. அதில், நவம்பர் 1 முதல் மழலையர் விளையாட்டு பள்ளிகள், நர்சரி பள்ளிகள் (எல்கேஜி, யூகேஜி), அங்கன்வாடி பள்ளிகள் முழுமையாக செயல்படலாம். காப்பாளர், சமையலர் உள்பட அனைத்து பணியாளர்களும் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என்று அறிவித்தது.

இதையும் படிக்ககரோனா தடுப்பூசி முகாம் தொடங்கியது

இந்நிலையில், மழலையர் மற்றும் நர்சரி பள்ளிகள் நவம்பர் 1ஆம் தேதி திறக்கப்படாது என அரசு அறிவத்துள்ளது. பள்ளிகளை தற்போதைக்கு திறக்கும் முடிவு இல்லை என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மழலையர், எல்கேஜி, யூகேஜி பள்ளிகள் திறப்பு குறித்து பின்னர் முடிவு எடுக்கப்படும் என்றும் தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது.

ADVERTISEMENT


 

Tags : nursery schools play schools
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT