தமிழ்நாடு

பிரதமர் மோடியுடன் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சந்திப்பு

23rd Oct 2021 09:13 PM

ADVERTISEMENT

தமிழக ஆளுநராக பொறுப்பேற்றதற்குப் பிறகு முதல்முறையாக பிரதமர் மோடியை ஆளுநர் ஆர்.என்.ரவி தில்லியில் சந்தித்துப் பேசினார்.

6 நாள் பயணமாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று மாலை தில்லி புறப்பட்டு சென்றார். நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு பெறுவது தொடர்பான சட்டமசோதாவிற்கு ஒப்புதல் வழங்கக்கோரி முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆளுநரை நேரில் வலியுறுத்தியதைத் தொடர்ந்து இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. 

இதையும் படிக்க |  டிரோன் தாக்குதலில் அல் கொய்தா முக்கியத் தலைவர் கொலை

பிரதமர் மோடியுடன் நடைபெற்ற சந்திப்பில் பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனைத் தொடர்ந்து மத்திய அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளை ஆளுநர் ஆர்.என்.ரவி சந்திக்கவுள்ளார். 

ADVERTISEMENT

இதையும் படிக்க |  மன அழுத்தத்திலிருந்து குழந்தைகள் மீட்க வீட்டுப்பாடங்களுக்கு தடை விதிக்கும் சீனா

முன்னதாக அக்டோபர் மாதத்தின் தொடக்கத்தில் தில்லி சென்ற தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மத்திய அமைச்சர் அமித்ஷா, குடியரசுத் தலைவர் உள்ளிட்டோரை சந்துத்துப் பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : TNGovernor Modi RN Ravi
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT