தமிழ்நாடு

அரசுப் பேருந்தில் ஏறி ஆய்வு செய்தார் முதல்வர் ஸ்டாலின்

23rd Oct 2021 11:03 AM

ADVERTISEMENT


சென்னை: சென்னை கண்ணகி நகரில், சாலையில் சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்தில், திடீரென ஏறி ஆய்வு மேற்கொண்டார் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்.

செல்லும் வழியில் திடீரென காவல்நிலையத்துக்குள் நுழைந்து ஆய்வு செய்வது, நியாய விலைக் கடைக்குச் சென்று பொருள்கள் சரியாக வழங்கப்படுகிறதா என்று ஆய்வு செய்வது என திடீர் ஆய்வுகளை மேற்கொண்டு வரும் முதல்வர் ஸ்டாலின் இன்றும் ஒரு திடீர் ஆய்வு நடத்தினார்.

இதையும் படிக்கலாமே.. இந்த ராசிக்காரருக்கு திறமைக்கேற்ற வேலை கிடைக்கும்: இந்த வாரப் பலன்கள்

சென்னையில் கண்ணகி நகர் அருகே சாலையில் சென்று கொண்டிருந்த அரசு மாநகரப் பேருந்தில் திடீரென ஏறிய முதல்வர் ஸ்டாலின், பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்த பயணிகளின் குறைகளை கேட்டறிந்தார்.

ADVERTISEMENT

மகளிருக்கான இலவச பேருந்து சேவை எந்த அளவுக்கு இருக்கிறது என்பது பற்றி பேருந்தில் இருந்த பெண்களிடம் முதல்வர் ஸ்டாலின் கேட்டறிந்தார்.
 

Tags : chennai stalin ஸ்டாலின் bus முதல்வர்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT