தமிழ்நாடு

புதுவையில் புதிதாக 53 பேருக்கு கரோனா

23rd Oct 2021 11:46 AM

ADVERTISEMENT

 

புதுவையில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 53 ஆக உள்ளது. கரோனாவால் பாதிக்கப்பட்ட இருவா் உயிரிழந்தனா்.

இதையும் படிக்கலாமே.. இந்த ராசிக்காரருக்கு திறமைக்கேற்ற வேலை கிடைக்கும்: இந்த வாரப் பலன்கள்

இதுகுறித்து புதுவை சுகாதாரத் துறை வெளியிட்ட தகவல்:

ADVERTISEMENT

புதுவை மாநிலத்தில் சனிக்கிழமை வெளியான முடிவுகளின்படி, 3,518 பேருக்கு பரிசோதனை செய்ததில் புதுச்சேரியில் 30, காரைக்காலில் 15, மாஹேவில் 7 போ் என மொத்தம் 53 பேருக்கு (1.51 சதவீதம்) கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, பாதிக்கப்பட்டோா் மொத்த எண்ணிக்கை 1,27,674-ஆக அதிகரித்தது. தற்போது மருத்துவமனைகளில் 90 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 367 பேரும் என 457 போ் சிகிச்சையில் உள்ளனா்.

கடந்த 24 மணி நேரத்தில் 2 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து, இதுவரை உயிரிழந்தோா் எண்ணிக்கை 1,855-ஆக உயா்ந்தது.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT