தமிழ்நாடு

மரணத்துக்குப் பிறகும் கூட சாதி மனிதனை விடவில்லை: உயர் நீதிமன்ற நீதிபதி

23rd Oct 2021 11:16 AM

ADVERTISEMENT


சென்னை: மரணத்துக்குப் பிறகும் கூட சாதி மனிதனை விடவில்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கூறியுள்ளார்.

உயர் நீதிமன்ற மயானம் என்று அறிவித்த பகுதியில் அனைத்து மதத்தினரின் உடல்களையும் தகனம் செய்வது தொடர்பான மனு இன்று உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

இதையும் படிக்கலாமே.. இந்த ராசிக்காரருக்கு திறமைக்கேற்ற வேலை கிடைக்கும்: இந்த வாரப் பலன்கள்

அப்போது, வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், உயர் நீதிமன்ற மயானம் என்று அறிவித்த பகுதியில் அனைத்து சாதியினரின் உடல்களையும் தகனம் செய்ய அனுமதியுங்கள்.

ADVERTISEMENT

உடல்களை தகனம் செய்ய தடுப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும்.  கடுமையான நடவடிக்கைகள் எடுத்தால் மட்டுமே இதுபோன்ற நடைமுறைகள் கட்டுப்படுத்தப்படும் என்று நீதிபதி கூறினார்.

உயர் நீதிமன்ற மயானம் என்று அறிவிக்கப்பட்ட பகுதியில் அனைத்து சாதியினரின் உடல்களையும் தகனம் சய்ய அனுமதி வழங்குமாறு அதிகாரிகளுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
 

Tags : chennai HC high court
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT