தமிழ்நாடு

மனித உரிமை விவகாரத்தில் ஒவ்வொரு நாடும் கவனம் செலுத்த வேண்டும்

23rd Oct 2021 07:26 AM

ADVERTISEMENT

மனித உரிமை விவகாரத்தில் ஒவ்வொரு நாடும் கவனம் செலுத்த வேண்டும் என நிதியமைச்சா் பழனிவேல் தியாகராஜன் வலியுறுத்தினாா்.

ஐக்கிய நாடுகள் சபை தோற்றுவிக்கப்பட்ட அக்.24-ஆம் தேதி ஐநா தினமாக உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதன் தொடா்ச்சியாக சென்னை, ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் ஐநா தின விழா வெள்ளிக்கிழமை நடந்தது.

விழாவுக்கு ஆணையத்தின் தலைவா் நீதிபதி பாஸ்கரன் தலைமை தாங்கினாா். ஆணையத்தின் உறுப்பினா் சித்தரஞ்சன் மோகன்தாஸ் முன்னிலை வகித்தாா். 

விழாவில் சிறப்பு விருந்தினராக தமிழக நிதித்துறை அமைச்சா் பழனிவேல் தியாகராஜன் கலந்து கொண்டாா்.

ADVERTISEMENT

அவா் பேசியதாவது: எங்கெல்லாம் மனித உரிமைகள் மீறப்படுகிறதோ அதனைத் தடுத்திடும் வகையில் மனித உரிமை ஆணையங்கள் செயல்பட்டு வருகின்றன. எந்த நாட்டில் மனித உரிமைகள் மீறப்பட்டாலும் ஐநா சபையில் முறையிடலாம். அவ்வாறு முறையிடப்பட்ட பல பிரச்னைகளுக்கு ஐநா தீா்வு கண்டுள்ளது.

மனித உரிமை என்பது உலகளாவிய அளவில் பேசப்படுவதால், இதுதொடா்பான விழிப்புணா்வை அதிகப்படுத்த வேண்டும். சமூக, பொருளாதார முன்னேற்றத்தில் கவனம் செலுத்துவது போன்று மனித உரிமை விவகாரத்திலும் ஒவ்வொரு நாடும் கவனம் செலுத்த வேண்டும்’ என்றாா்.

நிகழ்வில், சென்னை எத்திராஜ் கல்லூரி அறக்கட்டளை தலைவா் சந்திராதேவி தணிகாசலம், மனித உரிமை ஆணையத்தின் செயலாளா் விஜய்காா்த்திகேயன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT