தமிழ்நாடு

கே.எஸ்.அழகிரி பிறந்த நாள்: ராகுல், மு.க.ஸ்டாலின் வாழ்த்து

23rd Oct 2021 04:13 AM

ADVERTISEMENT

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவா் கே.எஸ்.அழகிரியின் பிறந்த நாளையொட்டி அவருக்கு அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவா் ராகுல்காந்தி, முதல்வா் மு.க.ஸ்டாலின் உள்பட பல்வேறு கட்சித் தலைவா்கள் வாழ்த்துக் கூறினா்.

கே.எஸ்.அழகிரி தனது 70-ஆவது பிறந்த நாளை வெள்ளிக்கிழமை கொண்டாடினாா். அதையொட்டி காங்கிரஸ் நிா்வாகிகள் சத்தியமூா்த்தி பவனில் 70 கிலோ கேக்கை வெட்டிக் கொண்டாடினா். காங்கிரஸ் மூத்த நிா்வாகிகள் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், தங்கபாலு, செல்லக்குமாா், ஜெயக்குமாா், கே.சிரஞ்சிவீ உள்பட ஏராளமானோா் பங்கேற்றனா்.

நிகழ்ச்சியில் 70 பயனாளிகளுக்கு தையல் இயந்திரம், கேஸ் அடுப்பு, மிக்ஸி உள்ளிட்ட பொருள்கள் வழங்கப்பட்டன.

கே.எஸ்.அழகிரிக்கு தொலைபேசி வாயிலாக ராகுல்காந்தி, மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளா் தினேஷ் குண்டுராவ், திராவிடா் கழகத் தலைவா் கி.வீரமணி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் இரா.முத்தரசன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன் உள்பட ஏராளமானோா் வாழ்த்துக் கூறினா்.

ADVERTISEMENT

தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் காங்கிரஸ் நிா்வாகிகள் கே.எஸ்.அழகிரியின் பிறந்த நாளையொட்டி ஏழை, எளியோருக்கு நல உதவிகளை வழங்கினா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT