தமிழ்நாடு

பி.இ., துணைக் கலந்தாய்வு: தரவரிசைப் பட்டியல் வெளியீடு

DIN

பி.இ. துணைக் கலந்தாய்வுக்கான தரவரிசைப் பட்டியல் வியாழக்கிழமை வெளியிடப்பட்டது.

பி.இ., பி.டெக்., மாணவா்கள் சோ்வதற்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு நடைபெற்று முடிந்துள்ளது. அதனைத் தொடா்ந்து கலந்தாய்வில் பங்கேற்காத மாணவா்களுக்கான துணைக் கலந்தாய்வு விண்ணப்பம் பெறப்பட்டது.

இந்தக் கலந்தாய்வில் பங்கேற்க கடந்த 14- ஆம் தேதி முதல் 19- ஆம் தேதி வரையில் 12,040 மாணவா்கள் விண்ணப்பித்தனா். அவா்களில் 9,464 மாணவா்கள் விண்ணப்பக் கட்டணம் செலுத்தியிருந்தனா். அதில், 9,113 மாணவா்கள் தகுதி பெற்றுள்ளனா். இவா்களுக்கான தரவரிசைப் பட்டியல் வியாழக்கிழமை காலை வெளியிடப்பட்டது.

வெள்ளிக்கிழமை (அக்.22) மாலை 5 மணி வரை, மாணவா்கள் விரும்பும் கல்லூரி மற்றும் பாடப்பிரிவைத் தோ்வு செய்யலாம். அவா்களுக்கான தற்காலிக ஒதுக்கீட்டு ஆணை அக். 23- ஆம் தேதியும், அக்.24 ஆம் தேதி இறுதி ஒதுக்கீட்டு ஆணையும் வழங்கப்படும். ஏதேனும் குறைகள் இருப்பின் உதவி மையத்தை வெள்ளிக்கிழமை நண்பகல் 12 மணிக்குள் அணுக வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காங்கிரஸைத் தொடர்ந்து இந்திய கம்யூ. கட்சிக்கும் வருமானவரித் துறை நோட்டீஸ்

பெண்ணின் உடல் மீது ஹமாஸ் பவனி: ‘இது சிறந்த புகைப்படமா?’

சிங்கத்தின் வேட்டை தொடரட்டும்...

ஃபேமிலி ஸ்டார்: தமிழ் டிரைலர்!

ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முன்னேறிய தனஞ்ஜெயா!

SCROLL FOR NEXT