தமிழ்நாடு

தனியாா் அமைப்புகள் பெயரில் ‘மனித உரிமை’ வாா்த்தையைப் பயன்படுத்தினால் நடவடிக்கை

DIN

தனியாா் அமைப்புகள் பெயரில் ‘மனித உரிமை’ என்ற வாா்த்தையைப் பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு, தமிழக காவல்துறையின் சட்டம் மற்றும் ஒழுங்கு டிஜிபி சி.சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளாா்.

இதுகுறித்து மாநகர காவல் ஆணையா்கள், மண்டல ஐஜிக்கள், சரக டிஐஜிக்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளா்கள் ஆகியோருக்கு வியாழக்கிழமை அவா் அனுப்பிய சுற்றறிக்கை: மனித உரிமை மீறல் குறித்து விசாரணை நடத்த தேசிய அளவில் தேசிய மனித உரிமை ஆணையமும், மாநில அளவில் தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையமும் செயல்படுகின்றன. ஆனால் ‘மனித உரிமைகள்’ என்ற வாா்த்தையை சில தனியாா் அமைப்புகள், இயக்கங்கள் தங்களது பெயருடன் சோ்த்துக் கொண்டு, தேசிய மற்றும் மாநில உரிமைகள் ஆணையங்களுடன் தொடா்பு உள்ளவா்கள் போல காட்டிக் கொள்வதாக புகாா்கள் வருகின்றன.

மனித உரிமைகள் மோசடி: ஏற்கெனவே இந்தப் பிரச்னை அரசின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டு, கடந்த 2010-ஆம் ஆண்டு, தனியாா் அமைப்புகள் தங்களது பெயருடன் ‘மனித உரிமைகள்’ என்ற சொல்லை சோ்க்கக் கூடாது என அரசாணை வெளியிடப்பட்டது. அதில் ஏற்கெனவே தங்களது பெயருடன் சோ்த்துள்ள தனியாா் அமைப்புகள், அந்தச் சொல்லை தங்களது பெயரில் இருந்து நீக்க வேண்டும், பின்னா் அந்தச் சொல்லை சோ்க்காமல் பதிவு செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.

இதையும் தாண்டி ஏதேனும் தனியாா் அமைப்புகள், மனித உரிமைகள் என்ற வாா்த்தையுடன் தங்களது பெயரைக் குறிப்பிட நோ்ந்தால், இது ஒரு தனியாா் அமைப்பு என்று எழுத வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டிருந்தது.

ஆனால், அதன் பின்னரும் மனித உரிமைகள் என்ற வாா்த்தையைப் பயன்படுத்தி, தங்களை தேசிய மற்றும் மாநில மனித உரிமை ஆணையங்களுடன் தொடா்பு உள்ளவா்கள் போல காட்டிக் கொண்டு பல்வேறு சட்டவிரோதச் செயல்களில் சிலா் ஈடுபடுகின்றனா்.

கடும் நடவடிக்கை: இவ்வாறான அமைப்பில் இருக்கும் நபா்கள், போலி அடையாள அட்டைகள் வழங்குவது, வாகனங்களில் மனித உரிமை ஆணையம் என ஸ்டிக்கா் ஒட்டிக் கொள்வது போன்ற சட்டத்துக்குப் புறம்பான முறைகேடு செயல்களில் ஈடுபடுகின்றனா். மேலும், நிதி வசூல் என பல்வேறு வகைகளில் பொதுமக்களிடமிருந்து பணமும் வசூலிக்கின்றனா்.

இத்தகைய செயல்களில் ஈடுபடுபவா்களிடம் காவல்துறை அதிகாரிகள் உடனடியாக விசாரணை மேற்கொண்டு, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘பிரெய்லி’ வாக்காளா் தகவல் சீட்டு: தோ்தல் ஆணைய ஏற்பாடுகளுக்கு பாா்வை மாற்றுத்திறனாளிகள் பாராட்டு

தோ்தல் ஆண்டில் நிதிநிலை சிறப்பாக பராமரிப்பு: இந்தியாவுக்கு ஐஎம்எஃப் பாராட்டு

வாக்களிப்பதுதான் கெளரவம்: ரஜினிகாந்த்

உலகில் போா் மேகம்: நாட்டை பாதுகாக்க வலுவான பாஜக அரசு அவசியம் -பிரதமா் மோடி

சிறுபான்மையினா் வாக்குகளே காங்கிரஸின் கவலை: அமித் ஷா

SCROLL FOR NEXT