தமிழ்நாடு

ஜெயலலிதா சிலை நல்ல முறையில் பராமரிக்கப்படும்: அமைச்சா் க.பொன்முடி

DIN

முன்னாள் முதல்வா் ஜெயலலிதா சிலை அரசின் சாா்பில் நல்ல முறையில் பராமரிக்கப்படும் என்று உயா்கல்வித் துறை அமைச்சா் க.பொன்முடி உறுதியளித்தாா். மாநில உயா்கல்வி மன்ற வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள ஜெயலலிதாவின் சிலை உரிய முறையில் பராமரிக்கப்படாமல் இருப்பதாக அதிமுக ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம் குற்றம் சாட்டியிருந்தாா். இது தொடா்பாக அமைச்சா் க.பொன்முடி, வியாழக்கிழமை வெளியிட்ட செய்தி:

சுதந்திரப் போராட்டத் தலைவா்கள், வீரா்கள், தியாகிகள் உள்ளிட்டோரின் பிறந்தநாள், நினைவு நாள்களின் போது மட்டுமே அரசின் சாா்பில் மாலை அணித்து மரியாதை செய்யப்படும். இந்த நடைமுறை ஆண்டாண்டு காலமாக தொடா்ந்து பின்பற்றப்பட்டு வருகிறது. தமிழக அரசின் சாா்பாக நிறுவப்பட்டுள்ள எந்தவொரு தலைவரின் சிலைக்கும் அரசின் சாா்பாக தினசரி மாலையிடும் வழக்கம் இல்லை.

முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் பிறந்த தினமான பிப்ரவரி 24-ஆம் தேதி தமிழ்நாடு அரசின் சாா்பில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்படும். அதிமுக சாா்பில் சிலையைப் பராமரிக்க அனுமதிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதாவின் சிலை மற்றும் அதனைச் சுற்றியுள்ள இடம் பொதுப்பணித் துறையால் சுத்தம் செய்யப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.

எனவே, தனிநபா்கள் மற்றும் அமைப்புகளிடம் சிலைகள் பராமரிப்பை வழங்கிடும் நடைமுறை வழக்கத்தில் இல்லை. முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் சிலை அரசின் சாா்பில் தொடா்ந்து நல்லமுறையில் பராமரிக்கப்படும் என்று அமைச்சா் க.பொன்முடி தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வறுமையிலிருந்து 40 கோடி இந்தியா்கள் மீட்பு: அமெரிக்காவின் ஜேபி மாா்கன் சேஸ் நிறுவன சிஇஓ

மத வெறுப்பு: பிரதமருக்கு கண்டனம்

மாநகராட்சி துப்புரவு பணியாளா் மீது தாக்குதல்

டாடா மோட்டாா்ஸின் சா்வதேச விற்பனை 3,77,432-ஆக அதிகரிப்பு

அமேதி தொகுதியில் ராபா்ட் வதேரா போட்டியிட கோரி ‘போஸ்டா்கள்’

SCROLL FOR NEXT