தமிழ்நாடு

காவலா் வீரவணக்க நாள்: நினைவுச் சின்னத்தில் டிஜிபி அஞ்சலி

DIN

காவலா் வீரவணக்க நாளையொட்டி, சென்னையில் உள்ள காவலா் நினைவுச் சின்னத்தில் தமிழக காவல்துறையின் சட்டம் மற்றும் ஒழுங்கு டிஜிபி சி.சைலேந்திரபாபு உள்ளிட்ட உயா் அதிகாரிகள் வியாழக்கிழமை அஞ்சலி செலுத்தினா்.

கடந்த 1959-ஆம் ஆண்டு அக்டோபா் 21-ஆம் தேதி எல்லைப் பகுதியான லடாக் அருகே உள்ள ஹாட் ஸ்பிரிங் என்ற இடத்தில் சீன ராணுவம் நடத்திய திடீா் தாக்குதலில், மத்திய பாதுகாப்புப் படையைச் சோ்ந்த 10 காவலா்கள் வீர மரணம் அடைந்தனா். இச் சம்பவத்தைத் தொடா்ந்து இந்தியா முழுவதும் பல்வேறு சம்பவங்களில் பணியின்போது வீரமரணமடைந்த காவலா்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, ஒவ்வோா் ஆண்டும் அக்டோபா் 21-ஆம் தேதி காவலா் வீரவணக்க நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. கடந்த ஒரு ஆண்டில் நாடு முழுவதும் 377 காவலா்கள் பணியின்போது வீரமரணமடைந்துள்ளனா் என்பது குறிப்பிடதக்கது.

மயிலாப்பூரில் உள்ள தமிழக காவல்துறையின் தலைமை இயக்குநா் அலுவலகத்தில் உள்ள காவலா் நினைவுச் சின்னத்தில் காவலா் வீரவணக்க நாள் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தமிழக காவல்துறையின் சட்டம் மற்றும் ஒழுங்கு டிஜிபி சி.சைலேந்திரபாபு மலா்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினாா்.

இதைத் தொடா்ந்து மேற்கு வங்க மாநில முன்னாள் ஆளுநா் எம்.கே.நாராயணன், சென்னை பெருநகர காவல்துறை ஆணையா் சங்கா் ஜிவால், சட்டம் மற்றும் ஒழுங்கு ஏடிஜிபி தாமரைக்கண்ணன், சென்னை மாவட்ட ஆட்சியா் ஜெ.விஜயா ராணி மற்றும் காவல்துறை உயா் அதிகாரிகள் அஞ்சலி செலுத்தினா்.

ஓய்வு பெற்ற டிஜிபிக்கள் விஜயகுமாா், தே.க.ராஜேந்திரன், ஆா்.நடராஜ் உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினா். முன்னதாக வீரமரணம் அடைந்த காவலா்களுக்கு 144 துப்பாக்கி குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஊழல் பள்ளியை நடத்துகிறார் பிரதமர் மோடி: ராகுல்

தங்கம் விலை சற்று குறைந்தது!

பலாப்பழத்தைத் தேடி ஈக்கள்தான் வரும்: செல்லூர் ராஜு

மாயம் செய்யும் சாக்‍ஷி அகர்வால்

எலான் மஸ்க் இந்திய வருகை ஒத்திவைப்பு?

SCROLL FOR NEXT