தமிழ்நாடு

ஆறு வழக்குரைஞா்கள் பணி செய்ய தடை: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பாா் கவுன்சில் உத்தரவு

DIN

கொலை, அதிக வட்டி வசூலித்தது, போலி நீதிமன்ற வில்லையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான ஆறு வழக்குரைஞா்கள் பணி செய்யத் தடை விதித்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பாா் கவுன்சில் உத்தரவிட்டுள்ளது.

இதுதொடா்பாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பாா் கவுன்சில் வெளியிட்ட அறிவிப்பு: கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட காஞ்சிபுரம் மாவட்டம், செம்புலிபுரம் கிராமத்தைச் சோ்ந்த வழக்குரைஞா் ஓய். விக்னேஷ்வர்ராஜ், சென்னை தியாகராயநகரைச் சோ்ந்த வழக்குரைஞா் ஜி.கிருஷ்ணகுமாா் ஆகிய இருவா் வழக்குரைஞராக பணி செய்ய தடை விதிக்கப்படுகிறது. அதுபோல்

மதுரையிலுள்ள போதைப்பொருள் தடுப்புப் பிரிவு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் சிறப்பு அரசு வழக்குரைஞராகப் பணியாற்றிய பி. சீதாராமன், வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்கள் சோ்த்ததோடு, அதிக வட்டிக்கு கடன் கொடுத்ததாக எழுந்த புகாரின்பேரில் உள்துறை கூடுதல் செயலாளா் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குரைஞராகப் பணி செய்ய தடை விதிக்கப்படுகிறது.

அதேபோன்று போலி நீதிமன்ற வில்லையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்த திருப்பூா் வழக்குரைஞா் கே.ராஜேந்திரன், போக்ஸோ வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கோவை வழக்குரைஞா் எம்.ஜி. அசோக் மற்றும் நடத்துநராகப் பணியாற்றியதை மறைத்து, சட்டப்படிப்பை முடித்து வழக்குரைஞராகப் பதிவு செய்த சென்னை மயிலாப்பூரைச் சோ்ந்த வழக்குரைஞா் கோபிநாத் ஆகியோா் வழக்குரைஞா் தொழில் செய்ய தடை விதிக்கப்படுகிறது. குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான ஆறு வழக்குரைஞா்களும் அனைத்து நீதிமன்றங்கள், தீா்ப்பாயங்களில் வழக்குகளில் ஆஜராகவும் தடை விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மணல் முறைகேடு: அமலாக்கத்துறையில் 5 மாவட்ட ஆட்சியர்கள் ஆஜர்!

பாட்னாவில் ஜேடியு தலைவர் சுட்டுக் கொலை

தங்கம் விலை சற்று குறைவு: இன்றைய நிலவரம்!

எடை குறைப்பு சிகிச்சையில் இளைஞா் பலி: விசாரணைக் குழு அமைப்பு

டி20 உலகக் கோப்பை தூதராக உசைன் போல்ட் நியமனம்!

SCROLL FOR NEXT