தமிழ்நாடு

காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவராக படப்பை மனோகரன் போட்டியின்றி தேர்வு

22nd Oct 2021 11:41 AM

ADVERTISEMENT


காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவராக படப்பை.மனோகரன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

அண்மையில் நடந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில், காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்களுக்கான பதவிகளுக்கு திமுகவை சேர்ந்த 11 பேர் தேர்வு செய்யப்பட்டிருந்தனர். இவர்கள் 11 பேரும் இம்மாதம் 20 ஆம் தேதி உறுப்பினர்களாக பதவி ஏற்றுக் கொண்டனர். 

இதனைத் தொடர்ந்து மாவட்ட ஊராட்சி குழு தலைவரை தேர்வு செய்வதற்கான மறைமுக தேர்தல் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் மா.ஆர்த்தி தலைமையில் மறைமுக தேர்தல் நடைபெற்றது. 

இதையும் படிக்க | ஜெயலலிதா கார் ஓட்டுநர் கனகராஜ் மரணம் வழக்கு: மேல் விசாரணை தொடங்கியது

ADVERTISEMENT

இத்தேர்தலில் மாவட்ட ஊராட்சி 1 ஆவது வார்டு உறுப்பினர் ஆக தேர்வு செய்யப்பட்டிருந்த படப்பை மனோகரன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக ஆட்சியர் மா.ஆர்த்தி அறிவித்தார். 

ஆட்சியரின் அறிவிப்பைத் தொடர்ந்து படப்பை மனோகரன் மாவட்ட ஊராட்சி குழு தலைவராக அதிகாரிகள் முன்னிலையில் பொறுப்பேற்றுக்கொண்டார். 

இதையும் படிக்க | நாட்டில் குறைந்து வரும் தொற்று பாதிப்பு: ஒரே நாளில் 18,641 குணமடைந்தனர்

இதனைத் தொடர்ந்து தலைவராக தேர்வு செய்யப்பட்ட படப்பை மனோகரனுக்கு கட்சித் தலைவர்கள், பொதுமக்கள் உள்பட பலரும் கலந்துகொண்டு மலர் மாலைகள், சால்வைகள் அணிவித்து தங்களது வாழ்த்துக்களை பகிர்ந்துகொண்டனர்.

Tags : Padappai Manokaran unopposed District Panchayat Committee Chairman Kanchipuram District Panchayat Committee போட்டியின்றி தேர்வு படப்பை.மனோகரன்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT