தமிழ்நாடு

ராணிப்பேட்டை மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவராக ஜெயந்தி திருமூர்த்தி தேர்வு

22nd Oct 2021 12:49 PM

ADVERTISEMENT


ராணிப்பேட்டை மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவராக 9-ஆவது வார்டு உறுப்பினர் ஜெயந்தி திருமூர்த்தி தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் முடிந்ததை அடுத்து வெற்றி பெற்றவர்கள் அனைவரும் 20ஆம் தேதி உறுப்பினர்களாக பதவி ஏற்றுக் கொண்டனர். 

இதனைத் தொடர்ந்து மாவட்ட ஊராட்சி குழு தலைவரை தேர்வு செய்வதற்கான மறைமுக தேர்தல் வெள்ளிக்கிழமை மாவட்ட ஆட்சியர்  நடைபெற்றது. காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன் தலைமையில் நடைபெற்றது. 

இத்தேர்தலில் மாவட்ட ஊராட்சி 9 ஆவது வார்டு உறுப்பினர் ஜெயந்தி திருமூர்த்தி(திமுக)  தேர்வு செய்யப்பட்டதாக ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன் அறிவித்தார்.

ADVERTISEMENT

இதனைத் தொடர்ந்து ஜெயந்தி திருமூர்த்தி மாவட்ட ஊராட்சி குழு தலைவராக பதவி ஏற்றுக் கொண்டார். 

மாவட்ட குழு தலைவராக தேர்வு செய்யப்பட்ட ஜெயந்தி திருமூர்த்திக்கு மாவட்ட ஆட்சியர் மற்றும் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.

Tags : chairman ராணிப்பேட்டை மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் ஜெயந்தி திருமூர்த்தி Jayanthi Thirumurthy elected Ranipet District Panchayat Committee
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT