தமிழ்நாடு

திருச்சி கடை வீதிகள் ட்ரோன் மூலம் கண்காணிப்பு

22nd Oct 2021 03:32 PM

ADVERTISEMENT

திருச்சி கடை வீதிகள் ட்ரோன் மூலம் கண்காணிக்கப்படும் என மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

தீபாவளி பண்டிகை வரும் 4 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. பொதுமக்களின் பாதுகாப்பு கருதி திருச்சி தெப்பக்குளம் பகுதியில் தற்காலிக காவல் உதவி மையத்தினை திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் கார்த்திகேயன் தொடங்கி வைத்தார். 

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், திருச்சி மாநகரப் பகுதிகளில் மக்கள் அதிகம் கூடும் இடங்களான சின்னக்கடை வீதி, பெரியகடை வீதி, சிங்காரத் தோப்பு தெப்பக்குளம் பகுதிகளில் 127 சிசிடிவி கேமராக்கள், 800க்கும் மேற்பட்ட காவலர்கள் 6 கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

100-க்கும் மேற்பட்ட சீருடை அணியாத போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடை வீதிகளுக்கு வரும் பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும், முகக்கவசம் அணிய வேண்டும். திருச்சி மாநகரத்தில் 95 சதவீத காவலர்கள் தடுப்பு ஊசி செலுத்திக் கொண்டுள்ளனர். மீதமுள்ள 5% பேர் உடல்நலக் கோளாறு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் செலுத்திக்கொள்ளவில்லை.

ADVERTISEMENT

திருச்சி மாநகரத்தைப் பொருத்தவரை 1,051 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இதில் 300க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் பழுதடைந்த நிலையில் அவை பழுதுநீக்கம் செய்யப்பட்டு விட்டது. கடந்த காலங்களோடு ஒப்பிடுகையில் செயின் பறிப்பு சம்பவங்கள் குறைந்துள்ளது என்றார்.

முக்கிய வீதிகளில் தற்காலிக தரைக்கடைகள் அமைக்க அனுமதி அளிப்பது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் ஆலோசனை நடத்தப்பட்டு அதன் பிறகு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

திருச்சியில் முதன்முறையாக தீபாவளி கூட்ட நெரிசலை கண்காணிக்க ட்ரோன் பயன்படுத்தப்பட உள்ளது. முதன்முறையாக கடைவீதிகளில் ட்ரோன் மூலம் கண்காணிப்புப் பணி செயல்படுத்தப்படுகிறது என்றார்.

Tags : திருச்சி trichy
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT