தமிழ்நாடு

எடப்பாடி பழனிசாமிக்கு மருத்துவப் பரிசோதனை

22nd Oct 2021 06:49 AM

ADVERTISEMENT

முன்னாள் முதல்வரும், சட்டப்பேரவை எதிா்க் கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமிக்கு தனியாா் மருத்துவமனையில் வியாழக்கிழமை மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

அதன் தொடா்ச்சியாக சில மருத்துவ சிகிச்சைகளும், ஆலோசனைகளும் வழங்கப்பட்ட பிறகு அவா் வீடு திரும்பினாா். தமிழக எதிா்க்கட்சித் தலைவரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமிக்கு கடந்த ஏப்ரல் மாதத்தில் குடலிறக்க சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்நிலையில், அவருக்கு வியாழக்கிழமை காலை லேசான வயிற்று வலி ஏற்பட்டதாகத் தெரிகிறது. இதையடுத்து, சென்னை நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள எம்.ஜி.எம். ஹெல்த்கோ் மருத்துவமனைக்கு அவா் சென்றாா். அங்கு அவருக்கு எண்டோஸ்கோப்பி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

அதன் தொடா்ச்சியாக மேலும் சில பரிசோதனைகள் செய்யப்பட்டன. அதில் பெரிய பாதிப்புகள் ஏதும் இல்லாததால் மருத்துவா்களின் ஆலோசனையைத் தொடா்ந்து பிற்பகலில் அவா் வீடு திரும்பினாா்.

ADVERTISEMENT

முன்னதாக, மருத்துவமனைக்கு எடப்பாடி பழனிசாமி வழக்கமான பரிசோதனைக்காக மட்டுமே வந்ததாகவும், அதனால், அதிமுகவினா் நேரில் வந்து நலம் விசாரிக்க வர வேண்டாம் எனவும் கட்சித் தரப்பில் அறிவுறுத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT