தமிழ்நாடு

முதுநிலை ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க மேலும் அவகாசம்

21st Oct 2021 04:17 PM

ADVERTISEMENT

முதுநிலை ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர், கணினி பயிற்றுநர் பணிக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. 
ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.) மூலம் முதுகலை ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் நிலை-1, கணினி பயிற்றுநர் நிலை-1 பணியிடங்களில் சேர கடந்த ஆகஸ்ட் மாதம் 9-ம் தேதி முதல் விண்ணப்பங்கள் இணைய வாயிலாக பெறப்பட்டு வருகிறது. 
ஏற்கெனவே அக்.31 வரை அவகாசம் அளித்த நிலையில் ஆசிரியர்களுக்கு வயது உச்ச வரம்பு தற்போது அதிகரிக்கப்பட்டதால் நவ.9 வரை மேலும் அவகாசம் அளித்து ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

இதையும் படிக்க- சிங்கப்பூரில் அதிகரிக்கும் கரோனா பாதிப்பு; அதிரடியான நடவடிக்கைகளை எடுத்த அரசு

முன்னதாக பள்ளி ஆசிரியர் நியமனத்தின் உச்ச வயதுவரம்பை 5 ஆண்டுகள் அதிகரித்து தமிழக அரசு அண்மையில் உத்தரவிட்டது. இந்த தளர்வு 2022 இறுதிவரை மட்டுமே பொருந்தும் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Tags : School Teachers recruitment
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT