தமிழ்நாடு

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதானவர்களுக்கு சலுகை: எஸ்.ஐ. உள்ளிட்ட 7 போலீஸார் பணியிடை நீக்கம்

21st Oct 2021 11:59 AM

ADVERTISEMENT

 

சேலம்: பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதானவர்களுக்கு சிறை வழிக்காவல் விதிகளை மீறி சாலையோரத்தில் உறவினர்களை சந்திக்க அனுமதி அளித்ததாக ஆயுதப்படை சிறப்பு எஸ்.ஐ. உள்ளிட்ட 7 போலீஸார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட வசந்தகுமார், திருநாவுக்கரசு, மணிவண்ணன், சதீஷ் மற்றும் சபரிராஜன் ஆகியோர் சேலம் மத்திய சிறையில் இருந்து வழக்கு விசாரணைக்காக கோவை மகளிர் நீதிமன்றம் கொண்டு செல்லப்பட்டனர்.

இதையும் படிக்க | ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே இரிடியம் மோசடி: 4 பேர் கைது

ADVERTISEMENT

பின்னர் சேலம் திரும்பும் வழியில், சிறை வழிக்காவல் விதிமுறைகளை மீறி சாலையோரத்தில் வாகனத்தை நிறுத்தி கைதிகள் அவர்களின் உறவினர்களை சந்திப்பதற்கு போலீஸார் அனுமதித்தனர். இதுதொடர்பான தகவல்கள் சமூக வலைத் தளங்களில் வெளியானது.

இந்நிலையில், சேலம் மாநகர காவல் ஆணையாளர் நஜ்மல் ஹோடா, சேலம் ஆயுதப்படை சிறப்பு உதவி ஆய்வாளர் சுப்பிரமணியம், மற்றும் காவலர்கள் பிரபு, வேல்குமார் ராஜ்குமார், நடராஜன், ராஜேஷ்குமார், கார்த்தி உள்ளிட்ட 7 பேரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

Tags : SI Dismissal Privilege arrests பொள்ளாச்சி பாலியல் வழக்கு
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT