தமிழ்நாடு

காங்கயம்  அருகே வேன் மோதி இரு சக்கர வாகனத்தில் சென்றவர் பலி: ஒருவர் படுகாயம்

21st Oct 2021 03:41 PM

ADVERTISEMENT


காங்கயம்: காங்கயம் அருகே இருசக்கர வாகனம் மீது வேன் மோதிய விபத்தில், இருசக்கர வாகனத்தில் சென்ற ஒருவர் பலியானார். மற்றொருவர் படுகாயமடைந்தார்.

காங்கயம் அடுத்த திட்டுப்பாறை பகுதியில் உள்ள பாறைவலசு புதுக்காலனி பகுதியைச் சேர்ந்தவர்கள் அஜித்குமார் (21), சுப்பிரமணி (26). இவர்கள் இருவரும் பால்வண்டியின் ஓட்டுநராக பணி புரிந்து வந்தனர். 

இந்த நிலையில், புதன்கிழமை இரவு இருவரும் வேலையை முடித்து விட்டு, இருசக்கர வாகனத்தில் காங்கயம் - சென்னிமலை பகுதியில் உள்ள நால்ரோடு பகுதியைக் கடந்து சென்று கொண்டிருந்தனர். இருசக்கர வாகனத்தை சுப்பிரமணி ஓட்டிச் சென்றார். அஜித்குமார் பின்னால் அமர்ந்து சென்றார்.

இரவு 8.45 மணியளவில் சாவடி பகுதி அருகே சென்று கொண்டிருந்தபோது, எதிரே வந்த சரக்குவேன் எதிர்பாராதவிதமாக இவர்கள் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இந்த சம்பவத்தில் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்த இருவரும் தூக்கி வீசப்பட்டனர். இதில், அஜித்குமார் பலத்த காயமடைந்த நிலையில், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சுப்பிரமணி பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு, காங்கயம் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டார்.

ADVERTISEMENT

அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு சுப்பிரமணி தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து காங்கயம் காவலர்கள் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். 
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT