தமிழ்நாடு

மேட்டூர் அணை நீர்மட்டம் 94.20 அடியாக உயர்வு

21st Oct 2021 08:16 AM

ADVERTISEMENT


மேட்டூர் அணையின் நீர்மட்டம் வியாழக்கிழமை காலை 93.50 அடியிலிருந்து 94.20 அடியாக உயர்ந்தது. 

காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழை தனிந்த தன் காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 15,409 கன அடியிலிருந்து 10,559 கன அடியாக சற்று குறைந்து உள்ளது. 

அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 100 கன அடி வீதம் திறக்கப்பட்டு வருகிறது. கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 550 கன அடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 57.58 டி.எம்.சி. ஆக இருந்தது.

பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவைவிட அணைக்கு வரும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT