தமிழ்நாடு

உழவர் உதவி மையம்: அமைச்சர் அர.சக்கரபாணி திறந்து வைத்தார்

21st Oct 2021 10:00 PM

ADVERTISEMENT

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் உழவர் பெருமக்கள் நெல் விற்பனை செய்து பயன்பெறுவதற்கு தேவையான அனைத்து விவரங்களையும் தெரிந்துகொள்ளும் வகையில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத் தலைமை அலுவலகத்தில் உருவாக்கப்பட்ட உழவர் உதவி மையத்தினை 
உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி இன்று திறந்து வைத்தார். 

இதையும் படிக்க- ஜெயலலிதா சிலை நல்லமுறையில் பராமரிக்கப்படும்: அமைச்சர் பொன்முடி 

இதற்கெனத் தனியாக உருவாக்கப்பட்ட 6 இணைப்புகள் கொண்ட உழவர் உதவி மைய கட்டணமில்லா தொலைபேசி சேவையினையும், அவர் தொடங்கி வைத்தார். கட்டணமில்லாத் தொலைபேசி எண் 1800 599 3540 மூலம் தமிழகத்தில் உள்ள உழவர் பெருமக்கள் மேற்கண்ட கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் அலுவலக நேரங்களில் தொடர்பு கொண்டு நெல் விற்பனை செய்வதற்குத் தேவையான அனைத்து விவரங்களையும் தெரிந்துகொள்ளலாம். மேலும், நேரடி நெல் கொள்முதல் தொடர்பாக புகார்கள், ஆலோசனைகள் ஏதுமிருப்பின் அவற்றையும் தெரிவிக்கலாம்.
இந்நிகழ்வில் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர், முகமது நசிமுத்தின், இ.ஆ.ப., தமிழ்நாடு நுகர்பொருள்
வாணிபக் கழக மேலாண்மை இயக்குநர் வே. ராஜாராமன், இ.ஆ.ப., உயர் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்துகொண்டனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT