தமிழ்நாடு

சென்னை விமான நிலையத்தில் ரூ.2.19 கோடி தங்கம் பறிமுதல்

21st Oct 2021 07:22 PM

ADVERTISEMENT

சென்னை விமான நிலையத்தில் ரூ.2.68 கோடி மதிப்பிலான தங்கம் மற்றும் மின்னணுச் சாதனங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

துபைலிருந்து சென்னை வந்த விமானத்தில் ரூ.2.68 கோடி மதிப்பிலான 5.06 கிலோ தங்கம் மற்றும் மின்னணுச் சாதனங்களை சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்ததோடு 5 பேரை கைதுசெய்துள்ளனர்.

தங்கம் கடத்தி வரப்படுவதாக கிடைத்த உளவுத் தகவலின் அடிப்படையில், துபையிலிருந்து அக்டோபர் 20 அன்று காலை 8.40 மணிக்கு சென்னை வந்திறங்கிய பத்து ஆண் பயணிகளை வெளியே செல்லும் வாயிலில் சுங்க அதிகாரிகள் இடைமறித்து பரிசோதனை மேற்கொண்டனர்.

இதையும் படிக்க- மேலும் தளர்வு?: நாளை மறுநாள் முதல்வர் ஆலோசனை

ADVERTISEMENT

அப்போது, உபயோகப்படுத்தப்பட்ட மடிக்கணினிகள் மற்றும் டேப்லெட்டுகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டத் தங்கத் தகடுகள் கண்டறியப்பட்டது. இதையடுத்து அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட இந்தத் தங்கத்தின் மதிப்பு ரூ.2.19 கோடி ஆகும். 

அதோடு ரூ.48.06 லட்சம் மதிப்புள்ள மின்னணுப் பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் இதுதொடர்பாக 5 பேரை கைது செய்த அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Tags : Gold Seized
ADVERTISEMENT
ADVERTISEMENT