தமிழ்நாடு

+2 துணைத் தேர்வெழுதி மறுமதிப்பீடு/மறுகூட்டலுக்கு விண்ணப்பித்தோர் கவனத்துக்கு..

21st Oct 2021 12:23 PM

ADVERTISEMENT

 

கடந்த ஆகஸ்ட், 2021-ல் மேல்நிலை இரண்டாமாண்டு துணைத் தேர்வு எழுதி, மறுமதிப்பீடு / மறுகூட்டலுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான தேர்வு முடிவுகள் நாளை வெளியிடப்பட உள்ளதாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

இது குறித்து வெளியிடப்பட்டிருக்கும் செய்திக் குறிப்பில், நடைபெற்ற ஆகஸ்ட் 2021, மேல்நிலை இரண்டாமாண்டு துணை பொதுத் தேர்வு எழுதி, மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு  கோரி விண்ணப்பித்தவர்களுள் மதிப்பெண் மாற்றம் உள்ள தேர்வர்களது தேர்வெண்களின் பட்டியல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் 22.10.2021 அன்று முற்பகல் 11.00 மணிக்கு வெளியிடப்படவுள்ளது. 

இப்பட்டியலில் இடம்பெறாத தேர்வெண்களுக்குரிய தேர்வர்களின் விடைத்தாள்களில் எவ்வித மதிப்பெண் மாற்றமும் இல்லை என தெரிவிக்கப்படுகிறது.

ADVERTISEMENT

மதிப்பெண் மாற்றம் உள்ள தேர்வர்கள் மட்டும் மேற்காண் இணையதளத்தில் தங்களது தேர்வெண் (ரோல் நம்பர்) மற்றும் பிறந்த தேதி ஆகிய விவரங்களை பதிவு செய்து தங்களுக்கான திருத்தப்பட்ட மதிப்பெண்கள் அடங்கிய தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை உடனே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனவும், அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் தேதி குறித்து பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT