தமிழ்நாடு

100 கோடி தடுப்பூசி சாதனை: பிரதமருக்கு நன்றி தெரிவித்த புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை

21st Oct 2021 05:55 PM

ADVERTISEMENT

நாட்டில் 100 கோடி கரோனா தடுப்பூசிள் செலுத்தியதற்காக பிரதமர் மோடிக்கு புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் நன்றி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், மக்கள் தொகை அதிகம் கொண்ட நம் நாட்டில் கரோனா தடுப்பூசி செலுத்த முடியுமா? என்று கேட்ட மற்ற நாடுகளுக்கு இன்று 100 கோடி தடுப்பூசி செலுத்தி முடியும் என்று நிருபித்து சாதனை படைத்த நாடு நம் இந்தியா.

இந்தியாவில் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களின் எண்ணிக்கை 100 கோடியைத் தாண்டி சாதனை படைத்துள்ளது.

இந்த பெரும் சாதனையை படைக்க நம் இந்திய திருநாட்டை சிறப்பாக வழி நடத்திச் செல்லும் பிரதமர் நரேந்திர மோடிக்கு எனது மனமார்ந்த நன்றிகளை
தெரிவித்துக்கொள்கிறேன்.

ADVERTISEMENT

மேலும் நம் நாட்டிலேயே கரோனா தடுப்பூசி தயாரிக்கப்பட்டு அதை செலுத்திக்கொண்டவர்களின் எண்ணிக்கை 100 கோடியை தாண்டி மற்றும் 100 நாடுகளுக்கும் கொடுத்து உதவி சாதனை படைத்த நாடு நம் இந்தியா.

இந்த மாபெரும் சாதனையை படைக்க கரோனா தடுப்பூசியை கண்டுபிடித்த மருத்துவ வல்லுநர்கள், செயலாற்றிய மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும்
மருத்துவப்பணியாளர்கள் அனைவருக்கும் எனது பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன் என்று தெலுங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

Tags : vaccination
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT