தமிழ்நாடு

மதிமுக தலைமைச் செயலராக வைகோ மகன்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு

20th Oct 2021 06:19 PM

ADVERTISEMENT

 

மதிமுக தலைமைச் செயலாளராக வைகோவின் மகன் துரை வையாபுரி நியமிக்கப்பட்டுள்ளதாக வைகோ அறிவித்துள்ளார். 

துரை வைகோவுக்கு பொறுப்பு வழங்க வேண்டும் என ரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் பதிவான 106 வாக்குகளில் துரை வையாபுரிக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என 104 வாக்குகள் கிடைத்துள்ளன. 

படிக்க வாரிசு அரசியல் பேச்சுக்கே இடமில்லை': வைகோ

ADVERTISEMENT

இதனையடுத்து அவர் மதிமுகவின் செயலராக நியமிக்கப்படுவதாக செய்தியாளர் சந்திப்பின்போது வைகோ அறிவித்தார்.

இது தொடர்பாக மேலும் பேசிய அவர், துரை வையாபுரி நியமனத்தில் வாரிசு அரசியல் இல்லை என்று கூறினார். 

தொண்டர்கள் விருப்பத்தின் பெயரிலேயே அரசியலுக்கு வந்துள்ளதாகவும், பொதுவாழ்வுக்குத் தேவையான அனைத்து தகுதிகளும் துரை வையாபுரியிடம் உள்ளதாகவும் வைகோ கூறினார்.

Tags : Vaiko mdmk secratery துரை வையாபுரி
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT