தமிழ்நாடு

மின்வாரிய முறைகேடு ஆதாரத்தை வெளியிட வேண்டும்: செந்தில் பாலாஜி

20th Oct 2021 09:51 PM

ADVERTISEMENT

 

மின்வாரியத் துறையில் முறைகேடு எனக் கூறும் அண்ணாமலையிடம் அதற்கான ஆதாரத்தை வெளியிட வேண்டும் என்று மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சுட்டுரையில் அவர் பதிவிட்டுள்ளதாவது,  மின்வாரிய துறையில் முறைகேடு நடந்துள்ளதென அண்ணாமலை கூறியதற்கு ஆதாரத்தை கேட்டால், 
வாரிய அலுவலகத்திற்கு அனுப்பிய நிதி விவரங்களை வெளியிட்டுள்ளார். 

4 சதவிகிதம் கமிஷன் என மீண்டும் பொய் புகார் கூறி திமுக ஆட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்த பார்க்கிறார் அண்ணாமலை.  
ஆதாரத்தை வெளியிடவில்லை எனில் அவர்களின் வழக்கப்படி மன்னிப்பு கேட்க வேண்டும்.

ADVERTISEMENT

நிலுவை தொகைகள் சரி பார்க்கப்பட்டு, அந்தந்த மின் பகிர்மான மற்றும் மின் உற்பத்தி வட்டத்திற்குரிய மேற்பார்வை மற்றும் தலைமை பொறியாளர்கள் அலுவலக வங்கி கணக்குகளுக்கு அனுப்பப்பட்டு, பின்னர் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டது என்றும் பதிவிட்டுள்ளார்.

Tags : Senthil Balaji மின்சாரத் துறை
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT