தமிழ்நாடு

சங்ககிரி மேற்கு அருள்மிகு திரகம்பேஸ்வரர் சுவாமிக்கு அன்னாபிஷேகம் 

20th Oct 2021 04:50 PM

ADVERTISEMENTசங்ககிரி: சங்ககிரி மேற்கு  அருள்மிகு சாய்பாபா கோயில் வளாகத்தில் உள்ள அருள்மிகு திரகம்பேஸ்வரர் சுவாமிக்கு  ஐப்பசி மாத பௌணர்மியையொட்டி அன்னாபிஷேக சிறப்பு பூஜைகள் புதன்கிழமை நடைபெற்றன. 

அருள்மிகு சாய்பாபா  கோயிலில் ஐப்பசி மாத பௌணர்மியையொட்டி  அருள்மிகு திரகம்பேஸ்வரர்  சுவாமிக்கு புதன்கிழமை பால், தயிர், திருமஞ்சனம், மஞ்சள், திருநீறு, இளநீர் உள்ளிட்ட பல்வேறு திவ்ய பொருள்களைக்கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு பின்னர் 15 கிலோ அரிசியை கொண்டு  அன்னாபிஷேகத்துடன் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.  

அன்னாபிஷேகத்துடன் அருள்பாலித்த சுவாமியை பக்தர்கள் வணங்கிச் சென்றனர். கோயிலில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டன.
 

Tags : சிவன் சங்ககிரி sivan Annabhishekam
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT