தமிழ்நாடு

வேப்பனப்பள்ளி அருகே  தங்க நகைக்காக மூதாட்டி கொலை

19th Oct 2021 11:09 AM

ADVERTISEMENT


கிருஷ்ணகிரி: வேப்பனப்பள்ளி அருகே வீட்டின் வெளியே தூங்கிக் கொண்டிருந்த மூதாட்டியைக் கொன்று தங்க நகைகளை கொள்ளையடித்த மர்ம நபர்களை கவலர்கள் தேடி வருகின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளி அருகே உள்ளது நெடுமருதி கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்த  மூதாட்டி சூடம்மா (60). இவர் தனது வீட்டின் வெளியே தூங்குவது வழக்கம். 

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை அதிகாலை, சூடம்மா சடலமாகக் கிடப்பதைக் கண்ட அந்தக் கிராம மக்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலின் போரில் நிகழ்விடத்திற்கு சென்ற காவலர்கள், மேற்கொண்ட விசாரணையில், மர்ம நபர்கள் சூடம்மாவை கொன்று, அவர் அணிந்திருந்த 4 பவுன் தங்க நகைகளை  கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது.

ADVERTISEMENT

இந்த சம்பவம் குறித்து காவலர்கள் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர். தங்க நகைக்காக மூதாட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்தக் கிராமத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
 

Tags : வேப்பனப்பள்ளி கிருஷ்ணகிரி
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT