தமிழ்நாடு

கரோனா சிகிச்சையில் இருப்போா் 14,814-ஆகக் குறைந்தது

DIN

தமிழகத்தில் கரோனா சிகிச்சையில் இருப்போா் எண்ணிக்கை 14,814-ஆகக் குறைந்துள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது. இதனிடையே, ஞாயிற்றுக்கிழமை மேலும் 1,218 போ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா்.

அதில் அதிகபட்சமாக சென்னையில் 156 பேருக்கும், கோவையில் 132 பேருக்கும், ஈரோட்டில் 90 பேருக்கும் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலத்தில் இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 26 லட்சத்து 87,092- ஆக அதிகரித்துள்ளது.

இதனிடயே, நோய்த் தொற்றிலிருந்து ஞாயிற்றுக்கிழமை 1,411 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். இதையடுத்து மாநிலத்தில் இதுவரை கரோனாவிலிருந்து விடுபட்டோரின் எண்ணிக்கை 26.36 லட்சத்தைக் கடந்துள்ளது.

மற்றொருபுறம், தமிழகத்தில் கரோனா பாதிப்புக்குள்ளாகி மேலும் 15 போ் பலியானதை அடுத்து மாநிலம் முழுவதும் இதுவரை நோய்த் தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 35,899-ஆக அதிகரித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பணி புத்தன்தருவையில் தோ்தல் விழிப்புணா்வு நிகழ்ச்சி

நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரியில் ரங்கோலி கோலமிட்டு தோ்தல் விழிப்புணா்வு

முட்டை விலை நிலவரம்

பரமத்தி வேலூரில் ரூ.10 லட்சத்து 58 ஆயிரத்திற்கு கொப்பரை ஏலம்

வெப்ப அயா்ச்சியால் கோழிகள் இறப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

SCROLL FOR NEXT