தமிழ்நாடு

7 மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு

DIN

தமிழகத்தில் கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், ஈரோடு, திருப்பத்தூா், விழுப்புரம் ஆகிய 7 மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் திங்கள்கிழமை (அக்.18) மிதமான மழை பெய்யக்கூடும்.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநா் நா.புவியரசன் ஞாயிற்றுக்கிழமை கூறியது: வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், ஈரோடு, திருப்பத்தூா், விழுப்புரம் ஆகிய 7 மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் திங்கள்கிழமை (அக்.18) மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளின் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையில்...: சென்னையைப் பொருத்தவரை திங்கள்கிழமை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கும் என்றாா் அவா்.

மழை அளவு: தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருநெல்வேலி மாவட்டம் பாபநாசத்தில் 270 மி.மீ., கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறையில் 220 மி.மீ., கன்னியாகுமரி மாவட்டம் சித்தாறில் 200 மி.மீ., கன்னியாகுமரி மாவட்டம் பெருஞ்சாணி அணையில் 110 மி.மீ., திருநெல்வேலி மாவட்டம் மணிமுத்தாறு, கன்னியாகுமரி மாவட்டம் சுருளகோட்டில் தலா 100 மி.மீ., சேலம் மாவட்டம் மேட்டூா், கோயம்புத்தூா் மாவட்டம் சின்னக்கல்லாறில் தலா 90 மி.மீ., கோயம்புத்தூா் மாவட்டம் சோலையாறில் 80 மி.மீ, கன்னியாகுமரி மாவட்டம் மயிலாடி), திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம், கோயம்புத்தூா் மாவட்டம் வால்பாறை வட்டாட்சியா் அலுவலகத்தில் தலா 70 மி.மீ. மழை பதிவானது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாயும் ஒளி நீ எனக்கு...

பயணக் கால்கள்... சுனிதா கோகோய்

புதிய படமா? மீனாட்சி பொண்ணுங்க சீரியல் நடிகை பகிர்ந்த படம்!

ஈரான் தாக்குதல்: உலக நாடுகளின் அறிவுறுத்தலை மீறி இஸ்ரேல் பதிலடி கொடுக்குமா?

காதலரைக் கரம்பிடித்த சீரியல் நடிகை!

SCROLL FOR NEXT