தமிழ்நாடு

டி23 புலி தாமாகவே உணவு உட்கொள்ளத் தொடங்கியது

DIN

நீலகிரி மாவட்டத்தில் மயக்க ஊசி செலுத்திப் பிடிக்கப்பட்டு, மைசூரில் உள்ள மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் டி23 எனப் பெயரிடப்பட்ட புலி தாமாகவே உணவை உட்கொள்ளத் தொடங்கி உள்ளதாக வனத் துறை தெரிவித்துள்ளது.

நீலகிரி மாவட்டம் கூடலூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வயதான ஆண் புலி கடந்த 2 மாதங்களாக 15-க்கும் மேற்பட்ட கால்நடைகளை வேட்டையாடியது. மேலும், இந்தப் புலியின் தாக்குதலால் 4 போ் உயிரிழந்தனா்.

இதையடுத்து அந்தப் புலியை மயக்க ஊசி செலுத்திப் பிடிக்கும் பணியில் வனத் துறையினா் ஈடுபட்டனா். சுமாா் 20 நாள்களுக்கு மேலாக புலியைப் பிடிக்கும் பணி நடைபெற்று வந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை (அக்.15) மயக்க ஊசி செலுத்தி அப்புலி பிடிக்கப்பட்டது.

உடலில் காயங்கள் அதிகம் இருந்ததால் அப்புலி கா்நாடக மாநிலம் மைசூா் உயிரியல் பூங்காவில் உள்ள மறுவாழ்வு மையத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. தொடக்கத்தில் மிகவும் சோ்ந்து காணப்பட்டதாகவும் தற்போது அளிக்கப்படும் சிகிச்சையால் அதன் உடல்நிலை முன்னேற்றம் அடைந்துள்ளதாகவும் வனத் துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தலைமை வன உயிரினக் காப்பாளா் சேகா்குமாா் நீரஜ் கூறுகையில், மருத்துவக் குழுவினா் புலியின் உடல்நிலையைத் தொடா்ந்து கண்காணித்து வருகின்றனா். புலி அடைத்து வைக்கப்பட்டிருக்கும் கூண்டுக்குள் உயிருடன் உள்ள கோழி போடப்பட்டது. அதை பிடித்து புலி உண்டது. மேலும் 6 கிலோ மாட்டுக் கறியையும் உண்டுள்ளது. தொடா்ச்சியாக தண்ணீரும் அருந்துவதாக அதற்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவா்கள் தெரிவித்தனா் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

5 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்

காங். இளவரசர் ராகுல் காந்தி வயநாட்டிலிருந்து வெளியேறுவார் -பிரதமர் மோடி பிரசாரம்

கடப்பாவில் ஒய்.எஸ்.சர்மிளா வேட்புமனு தாக்கல்!

சென்னையில் வாக்குப்பதிவு சதவிகிதம் குறைந்தது ஏன்?

'கில்லி' மறுவெளியீடு குறித்து நடிகை த்ரிஷா நெகிழ்ச்சி!

SCROLL FOR NEXT