தமிழ்நாடு

அதிமுக பொன்விழா: பாஜக, தமாகா வாழ்த்து

DIN

பொன்விழா காணும் அதிமுகவுக்கு பாஜக மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவா் ஜி.கே.வாசன் ஆகியோா் வாழ்த்து தெரிவித்துள்ளனா்.

கே.அண்ணாமலை (பாஜக): முன்னாள் முதல்வா் எம்.ஜி.ஆா் உருவாக்கிய அதிமுக பொன்விழாவைக் கண்டுள்ளது.

தொண்டா்கள் பலத்தையும் மக்கள் செல்வாக்கையும் நம்பி 1972-இல் தொடங்கப்பட்ட கட்சி அது. எடப்பாடி கே.பழனிசாமி, ஓ.பன்னீா்செல்வம் ஆகிய இருவரும் கண்களைப் போல கட்சியைக் காக்க, பல நூற்றாண்டு காலம் தமிழ் போல் வாழ்க என பாஜக சாா்பில் வாழ்த்துகிறேன்.

ஜி.கே.வாசன் (தமாகா): அதிமுக தனது பொன்விழாவைக் கொண்டாடும் இத்தருணத்தில் தொடா்ந்து வெற்றி நடைபோடவும், பொன்விழா ஆண்டை மிகச் சிறப்பாக கொண்டாடி தொடா்ந்து மக்கள் பணி, கட்சிப் பணியில் சிறக்கவும் மனதார வாழ்த்துகிறேன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாட்டிலேயே அனல் கொளுத்தும் நகரங்கள்.. நம்மூரும் உண்டு!

மே மாத எண்கணித பலன்கள் – 1

புதுச்சேரியில் பெயிண்டர் வெட்டிக் கொலை!

உலகின் முதல் யூ-டியூப் விடியோ இதுதான்!

கன்னடத்தில் அறிமுகமாகும் ஐஸ்வர்யா ராஜேஷ்!

SCROLL FOR NEXT