தமிழ்நாடு

கன்னியாகுமரியில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை

DIN

கன்னியாகுமரியில் வெள்ள பாதிப்பு பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு நாளை விடுறை அறிக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றார் அணைகளிலிருந்து 30 ஆயிரம் கனஅடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் குழித்துறை தாமிரவருணி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. 

மாங்காடு ஊராட்சி ஆலவிளை, நெடும்பறம்பு, பிலாந்தோட்டம், வாவறை ஊராட்சியில் பணமுகம், கோயிக்கத்தோப்பு, இஞ்சிபறம்பு, வடுவூர்தோட்டம், மாமுகம், பள்ளிக்கல், புதுச்சை, நெடும்பறம்பு, முஞ்சிறை ஊராட்சி பார்த்திபபுரம், பிளாக் ஆபீஸ் சுற்றுவட்டார பகுதிகள், ஏழுதேசம் பேரூராட்சி ஏலூர்முக்கு, வைக்கல்லூர், பருத்திக்கடவு,  மரப்பாலம், நடவரம்புகரி பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது.

இப்பகுதி மக்கள் மங்காடு அரசு நடுநிலைப் பள்ளி, பள்ளிக்கல் அரசு நடுநிலைப் பள்ளி, ஏழுதேசப்பற்று அரசு மேல்நிலைப் பள்ளிகளில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். நித்திரவிளையில் இருந்து மங்காடு வழி களியக்காவிளை செல்லும் சாலை, நித்திரவிளை - புதுக்கடை சாலை, மங்காடு - அதங்கோடு - குழித்துறை, மாங்காடு - வாவறை சாலைகளில் மழைநீர் தேங்கி உள்ளதால் இச்சாலைகளில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

மக்களின் இயல்பு வாழ்க்கையும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கன்னியாகுமரியில் வெள்ள பாதிப்பு பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு நாளை விடுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் அரவிந்த் உத்தரவிட்டுள்ளார்.  
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரூ.1,40,000 சம்பளத்தில் பொதுத்துறை நிறுவனத்தில் வேலை வேண்டுமா?

திருவண்ணாமலையில் நெரிசல்: பக்தர்கள் கடும் அவதி!

சங்ககிரி சென்னகேசவப் பெருமாள் கோயில் சித்திரைத் தேரோட்டம்!

12 ராசிக்குமான தினப்பலன்கள்!

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

SCROLL FOR NEXT