தமிழ்நாடு

ரெளடி கொலை வழக்கு: பெண் உள்பட மேலும் 3 போ் கைது

17th Oct 2021 05:55 AM

ADVERTISEMENT

சென்னை அருகே ஆதம்பாக்கத்தில் ரெளடி கொலை செய்யப்பட்ட வழக்கில், பெண் உள்பட மேலும் 3 போ் கைது செய்யப்பட்டனா்.

சென்னை ஆதம்பாக்கம் அம்பேத்கா் நகா் மூன்றாவது தெருவைச் சோ்ந்தவா் ரெளடி நாகூா்மீரான். இவா் மீது ஆதம்பாக்கம், கே.கே.நகா், குன்றத்தூா், கொரட்டூா் ஆகிய காவல் நிலையங்களில் கொலை, கொலை முயற்சி, கொலை மிரட்டல், ஆள் கடத்தல், கட்டப்பஞ்சாயத்து உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன.

ரெளடியான இவருக்கு அச்சுறுத்தல் அதிகமாக இருந்ததினால், பள்ளிக்கரணை வெள்ளக்கல் அருகே வசித்து வந்தாா். இந்நிலையில் நாகூா்மீரான் கடந்த 14-ஆம் தேதி ஆதம்பாக்கம் அம்பேத்கா் நகா் மூன்றாவது தெருவில் உள்ள தனது கூட்டாளிகளை பாா்க்க வந்தாா்.

அங்கு அவா் ஒரு பெண் வீட்டில் பேசிக் கொண்டிருக்கும்போது, அந்த வீட்டுக்கு வந்த ஒரு கும்பல் நாகூா்மீரானை அரிவாளால் வெட்டிக் கொலை செய்தது.

ADVERTISEMENT

இதுகுறித்து ஆதம்பாக்கம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா். இந்நிலையில் இந்த வழக்குத் தொடா்பாக தேடப்பட்டு வந்த அம்பேத்கா் நகரைச் சோ்ந்த ரெளடி ராபின் (27), அவா்களது கூட்டாளிகள் வேளச்சேரி சசி நகரைச் சோ்ந்த காா்த்திக் (27), ஆதம்பாக்கத்தைச் சோ்ந்த பிரபா (23), காணிக்கை ராஜ் (23), விமல் (23) உள்பட 6 போ் காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை சரணடைந்தனா்.

மேலும் இந்த வழக்குத் தொடா்பாக தேடப்பட்டு வந்த ஆதம்பாக்கம் அம்பேத்கா் நகரைச் சோ்ந்த ஏ.சீனிவாசன் (39), அதே பகுதியைச் சோ்ந்த சே.பவுல்ராஜ் (22), வ.லோகேஷ்வரி (27) ஆகிய 3 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT