தமிழ்நாடு

சிவன்மலையில் 5,100 மரக்கன்றுகள் நடும் பணி: அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், என்.கயல்விழி துவக்கி வைப்பு

17th Oct 2021 03:44 PM

ADVERTISEMENT

காங்கயம்: காங்கயம் அருகே சிவன்மலையில் உள்ள சுப்பிரமணியசாமி கோயில் நிலத்தில் 5,100 மரக்கன்றுகள் நட்டு வளர்க்கும் பணியை அமைச்சர்கள் சாமிநாதன், என்.கயல்விழி ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை துவக்கி வைத்தனர்.

சிவன்மலை சுப்பிரமணியசாமி கோயிலின் அடிவாரத்தில், திருப்பூர் சாலைப் பகுதியில் உள்ள கருங்கல் வனம் என்னும் சிவன்மலை சுப்பிரணியசாமி கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் நடைபெற்ற இந்த மரம் நடும்  நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் எஸ்.வினீத் தலைமை வகித்தார்.

ஈரோடு எம்.பி., அ.கணேசமூர்த்தி முன்னிலை வகித்தார். இதில் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி ஆகியோர் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு, மரம் நடும் நிகழ்ச்சியைத் துவக்கி வைத்தனர்.

இதுகுறித்து அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கூறியபோது, இந்து அறநிலையத் துறையின் சார்பில், கலைஞர் தல மரக்கன்றுகள் நடும் திட்டத்தின் கீழ், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்துக் கோயில்களிலும் 3 ஆயிரம் மரக்கன்றுகள் நட்டு வைத்து வளர்ப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இதனை முன்னிட்டு, காங்கயம் அருகே, சிவன்மலையில் உள்ள சுப்பிரமணியசாமி கோயிலுக்குச் சொந்தமான 24 ஏக்கர் பரப்பளவில் 3,100 மரக்கன்றுகளும், 2 ஆயிரம் பனை விதைகளும் நட்டுவைப்பதற்கான நிகழ்ச்சியைத் துவக்கி வைத்துள்ளோம். இந்த 24 ஏக்கரில் 27 வகையான மரக்கன்றுகள் நட்டு வைத்து வளர்க்கப்படவுள்ளன என்றார்.

இந்த நிகழ்ச்சியில், இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் நடராஜன், சிவன்மலை சுப்பிரமணியசாமி கோயில் உதவி ஆணையர் ஜே.முல்லை மற்றும் இந்த மரக்கன்றுகளை நட்டு வைத்து பராமரிக்கவுள்ள காங்கயம் துளிகள், வனத்துக்குள் திருப்பூர் ஆகிய அமைப்புகளின் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT